எங்களைப் பற்றி

tamilbuzz.ae என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) வாழும் தமிழர்கள் மற்றும் இங்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்காகவே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மற்றும் அமீரக அரசின் அங்கீகாரம் பெற்ற ஒரு செய்தி நிறுவனம். புதிய தேசம், புதிய வாய்ப்புகள் – ஆனால் நம் மொழியில்! இதுவே எங்களின் அடையாளம்.

நாங்கள் வழங்குவது

அமீரக அரசின் புதிய சட்டங்கள், விசா நடைமுறைகள் மற்றும் போக்குவரத்து மாற்றங்கள், துபாயில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், பண்டிகைகள் மற்றும் தமிழ்ச் சமூகக் கூட்டம் குறித்த தகவல்கள், அமீரகத்தின் பல்வேறு துறைகளில் வெளியாகும் நம்பகமான வேலைவாய்ப்பு அறிவிப்புகள், அமீரகத் தமிழர்களின் சாதனைகள் குறித்த செய்திகளை தமிழ் மொழியில் உடனுக்குடன் வழங்குகிறோம். அமீரகத்தில் நடைபெறும் தமிழ் சமூகக் கூடல்கள், கலை நிகழ்ச்சிகள் மற்றும் திருவிழாக்கள் குறித்த உடனுக்குடன் செய்திகள்.

எங்கள் நோக்கம்

கனவுகளுக்காக தாய்நாட்டை விட்டுப் பிரிந்து, அமீரகத்தில் உழைக்கும் நமது தமிழ் உறவுகளுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும், செய்திகளையும், சுவாரசியமான நிகழ்வுகளையும் உடனுக்குடன் வழங்குவதே எங்களின் நோக்கம்.