ஜனவரி 2025 முதல், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய புதிய கட்டண முறை அறிமுகம்

எலெக்ட்ரிக் வாகனங்கள் சார்ஜிங் செய்வதற்கான புதிய நடைமுறையை அரசின் எலெக்ட்ரிக் வாகன சார்ஜிங் நெட்வொர்க்கான UAEV அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் DC சார்ஜிங் AED 1.20 per kWh Plus VAT மற்றும் AC சார்ஜிங் AED 0.70 per kWh plus VAT இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

இந்த கட்டணங்கள் மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை  மேம்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும், மே மாதத்தில் கட்டணங்கள் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து எலெக்ட்ரிக் சார்ஜிங் சேவைகள் இலவசமாக உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய செயலி: 

இதற்காக UAEV அறிமுகப்படுத்தியுள்ள செயலியில் பொதுமக்கள் அருகில் உள்ள சார்ஜிங் நிலையங்கள், live status updates மற்றும் எளிய கட்டண முறைகள் போன்ற வசதிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த செயலி, அனைத்து நேரங்களிலும் தடையற்ற பயனர் அனுபவங்களை உறுதிசெய்து, உடனடி உதவிகளை வழங்குவதற்காக பிரத்யேகமாக 24/7 அழைப்பு மையத்தையும் ஐக்கிய அரபு அமீரகம் தொடங்குகிறது.

அதிகாரிகள் கூறுவது என்ன? 

இது குறித்து UAEV-வின் தலைவர் ஷெரீப் அல் ஓலமா கூறுகையில் “நிலையான சார்ஜிங் கட்டணங்களை அமல்படுத்தி, UAEV செயலி பயன்கள் மற்றும் 24/7 உதவிகள் போன்றவற்றை வழங்குவது எலெக்ட்ரிக் வாகன ஓட்டிகளின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான எங்கள் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மேலும், எங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதன் மூலமும், ஐக்கிய அரபு அமீரகத்தின் Net Zero 2050 Strategy இணைப்பதன் மூலமும், அனைவருக்கும் தூய்மையான, பசுமையான எதிர்காலத்தை நாங்கள் இயக்குகிறோம் “என்று அவர் கூறினார்.

2030 ஆம் ஆண்டளவில், 1000 சார்ஜர்கள் அமீரகத்தின் நகர்புற பகுதிகளில் நிறுவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.