🎬 HABEEBI Special Movie Premiere in Dubai | Exclusive Invite-Only Screening | Register Now

துபாயில் விமர்சியாக நடைபெற்ற வலைப்பேச்சு Fans Meet!

அன்றாட சினிமா மற்றும் அரசியல் கருத்துகளை பகிர்ந்து, தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஓர் பிரபலமான யூடியூப் பக்கமாக விளங்கி வரும்  வலைப்பேச்சு. கடந்த ஆகஸ்ட் 25, துபாயில் உள்ள தங்களின் ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடி விருந்து வைக்க விழா ஒன்றை துபாய் அல் நாதாவில் உள்ள லாவெண்டர் ஹோட்டெலில் அன்று மாலை 05 மணிக்கு  ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ்விழாவில் வலைப்பேச்சின் உரிமையாளர்களான அனந்தன், பிஸ்மி மற்றும் சக்திவேல், கலந்து கொண்டு மக்களுடன் உரையாடினர். தங்களின் அனைத்து காணொளியிலும் உரையாடுவது போன்று அவர்களுக்கே உரித்தான தோனியில் நிகழ்வை துவங்கிய அவர்கள்,  சினிமாவுடன் கலந்த அரசியல் கருத்துக்களை கலகலப்பாக பேசி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களின் உரையாடலுக்கு பின், ரசிகர்களுடன் கலந்துரையாட கேள்வி பதில் நேரமும், ஒவ்வொருவருடனும் தனித்தனியே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நிகழ்வும், இறுதியாக ரசிகர்களுக்கு விருந்தும் வழங்கப்பட்டது.