துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் 2026; நடந்தால் AED 1 மில்லியன் மதிப்பிலான பரிசுகள்!

துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (Dubai Fitness Challenge – DFC) 10-வது பதிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், Dubai Residential நிறுவனம் தனது 21 குடியிருப்புகளில் வாழும் மக்களுக்காக ஒரு பிரம்மாண்ட உடற்பயிற்சி இலக்கை அறிவித்துள்ளது. குடியிருப்பாளர்கள் தங்கள் உடல்தகுதியை மேம்படுத்தும் நோக்கில், ஒட்டுமொத்தமாக  1 Billion Steps  நடக்க வேண்டும் என்ற கூட்டு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துபாய் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாத் துறை (DET) மற்றும் துபாய் விளையாட்டு கவுன்சில் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தப்படும் இந்த முயற்சியில், 146,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் பங்கேற்கவுள்ளனர். இது DFC-ன் புகழ்பெற்ற “30×30 சேலஞ்ச்” (தொடர்ந்து 30 நாட்களுக்கு தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தல்) திட்டத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமையும்.

பங்கேற்பது எப்படி?

  • செயலி பதிவு: இதில் பங்கேற்க விரும்பும் குடியிருப்பாளர்கள் ‘fitze’ செயலியைப் பதிவிறக்கம் செய்து, தங்களின் தினசரி நடக்கும் Stepகளை கணக்கிட வேண்டும்.
  • காலஅளவு: வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29 வரை பதிவு செய்யப்படும் அடிகள் மட்டுமே இந்த 1 மில்லியன் அடிகள் இலக்கில் கணக்கில் கொள்ளப்படும்.

AED 1 மில்லியன் மதிப்பிலான பரிசுகள்!

இந்தச் சவாலில் பங்கேற்கும் குடியிருப்பாளர்களுக்குக் காத்திருக்கும் சிறப்புச் சலுகைகள்:

  • மெகா பரிசுகள்: ‘fitze’ செயலி வழியாக சர்வதேச சுற்றுலாப் பயணங்கள் (International Trips), ஆடம்பர ஹோட்டல் தங்குமிடங்கள் (Staycations), உணவு மற்றும் ஷாப்பிங் வவுச்சர்கள் என மொத்தம் AED 1 மில்லியன் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
  • கரீம் பிளஸ் மெம்பர்ஷிப்: அதிக அடிகள் நடந்து முதன்மை 5 இடங்களைப் பிடிக்கும் நபர்களுக்கு 12 மாத இலவச ‘Careem Plus’ மெம்பர்ஷிப்பும், அடுத்த 5 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு 6 மாத இலவச மெம்பர்ஷிப்பும் வழங்கப்படும்.
  • தலாபத் சலுகை: இந்த நிகழ்வின் அதிகாரப்பூர்வ ஹைட்ரேஷன் பார்ட்னரான ‘தலபாத்’ (Talabat), உடற்பயிற்சி நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் குடும்பங்களுக்கு இலவச ‘Talabat Pro’ சந்தாக்களை வழங்கவுள்ளது.

குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் பல்வேறு பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளதால், இப்போட்டியில் பங்கேற்க மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவி வருகிறது.