RTA மற்றும் Al Etihad Payments இணைந்து வழங்கும் புதிய nol கார்டை அறிமுகம் செய்துள்ளது.
துபாயின் பொதுப் போக்குவரத்து சேவைகளில் கட்டணம் செலுத்தப் பயன்படும் ‘நூல்’ (nol) அட்டையின் புதிய வகை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‘nol-Jaywan’ எனப்படும் இந்த அட்டைகள், சோதனை முறையில் இந்த மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), அமீரக மத்திய வங்கியின் துணை அமைப்பான ‘Al Etihad Payments’ நிறுவனமும் இணைந்து இந்த அட்டைகளை அறிமுகம் செய்துள்ளன.
nol-Jaywan கார்டின் முக்கிய அம்சங்கள்
- Android மற்றும் iOS இயங்குதளங்களில் செயல்படும் ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்த கார்டுகளை டிஜிட்டல் முறையில் எளிதாகப் பயன்படுத்தலாம். பயணிகள் தங்கள் மொபைல் போன்கள் மூலமாகவே கார்டை நிர்வகிக்கவும், சேவைகளைப் பெறவும் முடியும்.
- இந்த கார்டுகள் துபாயில் உள்ள பொது மற்றும் தனியார் போக்குவரத்துகள் மட்டுமின்றி, அமீரகம் முழுவதிலும் உள்ள பொதுப் போக்குவரத்து அமைப்புகள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு தளங்களிலும் செல்லுபடியாகும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
- இந்த கார்டு வைத்திருப்பவர்கள் 120-க்கும் மேற்பட்ட சலுகைகள் பிரத்யேக தள்ளுபடிகளை பெற முடியும்.
புதிய ‘nol-Jaywan’ கார்டு அறிமுகம் குறித்து RTA தலைவர் மத்தார் அல் தாயர் கூறுகையில், “இந்த புதிய தலைமுறை ‘nol-Jaywan’ கார்டுகள், பொதுப் போக்குவரத்தை தினசரி பணப் பரிவர்த்தனைகளுடன் இணைப்பதில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது டிஜிட்டல் கட்டண முறையை எளிதாக்கி, பயணிகளுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் இத்திட்டம் குறித்து கருத்து தெரிவித்த ‘Al Etihad Payments’ நிறுவனத்தின் தலைவர் சைஃப் ஹுமைத் அல் தாஹிரி, “அமீரகத்தின் ‘Jaywan’ கட்டண முறையை nol கார்டுடன் இணைப்பது, நாட்டின் டிஜிட்டல் நிதி உள்கட்டமைப்பை ஒருங்கிணைக்கும் மிகப்பெரிய நகர்வாகும்” என்று குறிப்பிட்டார்.
