அமீரகத்தில் குடியிருப்பு அனுமதி (residence permit) பெறுவதற்கான செயல்முறையை ICP விளக்கியுள்ளது

ஐக்கிய அரபு அமீரகத்தில் குடியிருப்பு அனுமதியை பெறுவும், புதுப்பிக்கவும், மாற்றியமைக்கவும் ஆரம்பம் முதல் இறுதி வரை  தேவையான இணைய செயல்முறைகளையும் ICP விளக்கியுள்ளது. இது அமீரகத்தின் டிஜிட்டல் சேவைகளை எளிமையாக்குவதை நோக்கமாக கொண்டுள்ளது.

செயல்முறை குறித்து ICP அளித்த விளக்கம்?

  • UAE பாஸை பயன்படுத்தி ICP-யின் இணையதளம் அல்லது ஸ்மார்ட் செயலியில் உள்நுழைய வேண்டும்.
  • நீங்கள் யாருக்காக சேவையைப் பயன்படுத்துகிறீர்கள் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  • குடியிருப்பு அனுமதியை பெற வேண்டுமா, புதுப்பிக்க வேண்டுமா அல்லது மாற்ற வேண்டுமா என்பதை தேர்வு செய்யவும்.
  • விண்ணப்பப் படிவத்தை சரிபார்த்து, தேவையான மாற்றங்களை செய்ய வேண்டும். 
  • தரவுகளை இணைக்கும் முயற்சி தோல்வியானால் தேவையான ஆவணங்களை இணைக்கவும். 
  • சேவைக்கான கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தி முடிக்க வேண்டும்.
  • அனுமதி வழங்கப்பட்டவுடன் நீங்கள் பதிவுசெய்த முகவரிக்கு 48 மணி நேரத்திற்குள் மின்னஞ்சல் உறுதிப்படுத்தலை பெறுவீர்கள்.
  • உங்கள் எமிரேட்ஸ் ஐடி முகவரிக்கு குடியிருப்பு அனுமதி கொரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும்.

நேரிலும் விண்ணப்பிக்கலாம்:

பொது மக்கள் வேலை நேரங்களில் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள் (Customer Happiness centre) மூலம் விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரும்பும் நேரம்: சமர்ப்பித்த 48 மணி நேரத்திற்குள் உங்கள் அனுமதியைப் பெற எதிர்பார்க்கலாம்.

இந்தச் செயல்முறை UAE இன் மேலும் டிஜிட்டல் மற்றும் தானியங்கு சேவைகளின் வழிகாட்டுதலின் ஒரு பகுதியாகும், இது குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டினர் தங்கள் வதிவிடத் தேவைகளை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது.

TAGGED: