போக்குவரத்து நெரிசலின்றி, நிமிடங்களில் இலக்கை அடையும் துபாய் லூப்!

துபாயில் தொடர்ந்து நவீன போக்குவரத்து திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. அந்த வகையில் துபாயின் முக்கிய இடங்களுக்கு இடையிலான பயண தூரத்தை குறைக்கும் நோக்கில் துபாய் லூப் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

துபாய் லூப்:

  • பரபரப்பான நேரங்களில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எந்தவொரு போக்குவரத்து இடையூரும் இல்லாமல், சில நிமிடங்களுக்குள் பயணிக்க முடியும் என்பது தான் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட துபாய் லூப் திட்டமாகும்.
  • அமெரிக்க பணக்காரர் எலான் மஸ்க்கின் தி போரிங் (The Boring Company) நிறுவனத்துடன் இணைந்து சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இந்த துபாய் லூப்  திட்டத்தை உருவாக்குகிறது.

சிறப்பம்சங்கள்:

  • துபாய் லூப் ஒரு மணி நேரத்திற்கு 20,000 மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • 17 கி.மீ அளவிலான சுரங்கப்பாதையில்,. 11 நிலையங்கள் அமைக்கப்பட உள்ளது.  கொண்ட 17 கி.மீ அளவிலான சுரங்கப்பாதையை கொண்டிருக்கும்.
  • இந்த லூப் மணிக்கு 160 கி.மீட்டர் வேகத்தில், துபாயின் முக்கிய இடங்களை நிமிடங்களில் கடக்கும்.
  • ஆரம்பத்தில் 17 கி.மீட்டர் சுரங்கப்பாதையில் செயல்படும் என்றும், பின் மணிக்கு 1,00,000 பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்படும் என தி போரிங் நிறுவனம் கூறியுள்ளது.
  • இது மின்சாரத்தால் இயங்கும் வேகமான போக்குவரத்தாகும்.

உலகில் வேறு எங்காவது லூப் இருக்கிறதா?

  • லூப் அமைப்பு லாஸ் வேகாஸில் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.
  • தி போரிங் நிறுவனத்தின் கூற்றுப்படி, லூப் அமைப்பு லாஸ் வேகாஸில் 2021 முதல் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பயணிகளைக் கொண்டு சென்றுள்ளது.
  • வேகாஸ் லூப் 104 நிலையங்களுடன் 110 கிலோமீட்டர் சுரங்கத்திற்கு உரிமம் பெற்றுள்ளது. இது இறுதியில் ஒரு மணிநேரத்தில் 90 ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

லூப் பாதுகாப்பானதா?

  • லூப் சுரங்கப்பாதைகளில் அவசரகால வழிகள், தீ கண்டறியும் அமைப்புகள், தீயை அணைக்கும் அமைப்புகள் மற்றும் அவசர தொடர்பு அமைப்பு உள்ளன. 
  • லூப் முழு கேமரா கவரேஜையும் கொண்டுள்ளது.
  • மோசமான வானிலை, பனிப்புயல் அல்லது மணல் புயல் போன்றவை ஏற்பட்டால் கூட சுரங்கப்பாதையில் செல்லும் லூப்பிற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. பாதுகாப்பனதும் கூட.

 போக்குவரத்து சிக்கல்களை எப்படி தீர்க்கும்?

  • லூப் அமைப்பு, வேகமாகவும், தடங்கலின்றியும் செல்வதால் பயண நேரத்தை குறைக்க முடியும். 
  • லூப் அமைப்பில் எத்தனை நிலையங்களை உருவாக்கலாம் என்பதற்கு உச்ச வரம்பு இல்லாததால், இது ஒரு பிளஸ் பாய்ண்ட். இதனால் நெரிசல் நிறைந்த நகரங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் எளிதாக ஒருங்கிணைக்கப்படும்.
  • நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களை அதிகரிப்பதன் மூலம் நெரிசலை குறைக்க முடியும். தேவைப்பட்டால், பெரிய நிலையங்கள் கட்டப்படும்.
TAGGED: