எமிரேட்ஸ் ஐடி-க்கு எதனால் அபராதம் விதிக்கப்படுகிறது? அது தவிர்ப்பது எப்படி?

1

எமிரேட்ஸ் ஐடி என்பது என்ன?

எமிரேட்ஸ் ஐடி என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஒரு தேசிய அடையாள அட்டை ஆகும். இது அமீரகத்தில் வாழும் அனைத்து  குடியிருப்பாளர்களுக்கும் மற்றும் குடியிருப்பு அனுமதி பெற்ற வெளிநாட்டு குடிமக்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த ஐடி, நபரின் அடையாளத்தை சரிபார்க்க மற்றும் அனைத்து அரசாங்க சேவைகளில் பதிவு செய்ய பயன்படுகிறது. 

எமிரேட்ஸ் ஐடியின் முக்கிய அம்சங்கள்:

அடையாளத்தை உறுதி செய்தல்: அமீரகத்தில் சேவை பெறுவதற்கு அல்லது ஏதேனும் கடமைகளை செய்யும் போது,  எமிரேட்ஸ் ஐடி மிக முக்கியமானது. நபரின் அங்கீகாரம் மற்றும் விசாவை சரிபார்க்க உதவுகிறது. இந்த ஐடி கார்டு, பொதுவாக உங்கள் அனைத்துப் பணிகள் மற்றும் பராமரிப்பு அடையாளமாக செயல்படுகிறது.

அபராதங்கள் மற்றும் தண்டனைகள்: எமிரேட்ஸ் ஐடி புதுப்பிப்பதில் அல்லது சரியான நேரத்தில் அதை பதிவு செய்யாமல்  இருந்தால், அபராதம் விதிக்கப்படலாம்.

சில முக்கிய அபராதங்கள்:

  1. அடையாள அட்டை பதிவு மற்றும் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டால்  தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும்  AED 20 அபராதமாக  விதிக்கப்படும். அதிகபட்சமாக   AED 1,000 வரை விதிக்கப்படும்.
  2.  அடையாள அட்டை காலாவதி தேதியிலிருந்து 30 நாட்களுக்குப் பிறகு அதைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏறபட்டால்,  தாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் AED 20 , முதல் அதிகபட்சமாக  AED 1,000 வரை விதிக்கப்படும்.
  3.  ஐடியைப் பெற தவறான தகவல்களை வழங்கினால்  AED 3,000 அபராதமாக விதிக்கப்படும். 
  4. கணினியில் விண்ணப்பத்தை தட்டச்சு செய்வதில் தவறு ஏற்பட்டால் AED 100 அபராதம்  விதிக்கப்படும். 
  5.  ஊழியர்களின் வேலையைத் தடுப்பது அல்லது அவர்களுடன் ஒத்துழைக்கத் தவறினால் AED 5,000 அபராதம். 
  6. எந்தவொரு செயலையும் மேற்கொள்ளாத நிறுவனத்திற்கு விசாக்கள் அல்லது நுழைவு அனுமதிகளை வழங்குதல்  AED 20,000. 
  7. அமைப்பை தவறாகப் பயன்படுத்தினால்  AED 5,000 அபராதமாக விதிக்கப்படும். 

எமிரேட்ஸ் ஐடி அபராதங்களை ஆன்லைனில் எப்படி பார்க்கலாம்?

  • smartservices.icp.gov.ae என்ற இணையதளத்திற்கு செல்லவும். 
  • Public Services என்பதை கிளிக் செய்யவும். 
  • ‘File Validity’ என்பதை தேர்வு செய்யவும்.
  • அடுத்து  வரும் விருப்பங்களைத் தேர்ந்தெடுத்து தேவையான விவரங்களை உள்ளிடவும்.
  • கேப்ட்சாவை நிரப்பி ‘Search’ என்பதைக் கிளிக் செய்து, உங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதங்களை பார்த்துக்கொள்ளலாம்.    

அபராதங்களை தவிர்ப்பதற்கு சில வழிகள்: 

எமிரேட்ஸ் ஐடியைப் புதுப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டிருந்தால்,  அபராதங்களிலிருந்து விலக்கு அளிக்கப்படலாம் என்று அடையாளம், குடியுரிமை, சுங்கம் மற்றும் துறைமுகப் பாதுகாப்புக்கான கூட்டாட்சி ஆணையம் (ICP) தெரிவித்துள்ளது.

அபராத சலுகைக்கு விண்ணப்பிக்க அல்லது தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

  • மூன்று மாதங்களுக்கும் மேலாக வெளிநாட்டில் தங்கியிருந்த அல்லது வெளிநாட்டில் தங்கியிருக்கும் போது விசா அல்லது எமிரேட்ஸ் ஐடி காலாவதியான ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் பயண ஆவணங்களை வழங்க வேண்டும்.
  • வெளிநாட்டில் இருந்தபோது, நிர்வாகம் அல்லது நீதிமன்ற உத்தரவு காரணமாக அத்துடன், பாஸ்போர்ட் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் அல்லது புதுப்பிக்கப்படுத்தப்பட்டிருந்தால், அதிகாரப்பூர்வ கடிதம் வழங்க வேண்டும்.
  • உடல்நிலை மோசமாக இருப்பவர்கள், தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், அல்லது கை, கால்கள் முடக்கம் உள்ளவர்கள், மருத்துவ  சான்றிதழ் வழங்க வேண்டும்.
  • 70 வயதுக்கு மேற்பட்டவர்களால், கஸ்டமர் சர்வீஸ் மையத்திற்கு வர முடியாது என்பதால், அவர்களது பிறந்த சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் கொண்டு வயதை நிரூபிக்க வேண்டும்.

எமிரேட்ஸ் ஐடியின் அமைப்புகள் அல்லது இதற்காக ஒதுக்கப்பட்ட தட்டச்சு அலுவலகங்கள் அல்லது அதன் ஊழியர்களால், ஐடி கிடைப்பதற்கு அல்லது புதுப்பிப்பதற்கு தாமதம் ஏற்பட்டிருந்தால், சலுகை பெற முடியும்.  

ஆன்லைனில் சலுகைக்கு விண்ணப்பிப்பது  எப்படி?

  • ICP கஸ்டமர் ஹேப்பினஸ் மையங்கள்
  • ICP ஸ்மார்ட்  சேவைகள் இணையதளம் – smartservices.icp.gov.ae அல்லது ‘UAEICP’ ஆப் (Apple மற்றும் Android சாதனங்களில் கிடைக்கும்)
  • ICP-க்கு பதிவு செய்யப்பட்ட டைப்பிங் மையங்கள் ஆகியவை மூலம் விண்ணப்பிக்க முடியும்.

ICP-படி, ஆன்லைனில் சலுகைக்கு விண்ணப்பிக்கும் படிகள்:

  • smartservices.icp.gov.ae இணையதளத்தின் மூலம் எமிரேட்ஸ் ஐடியை புதுப்பிப்பதற்கான விண்ணப்பத்தை ஆன்லைனில் சமர்ப்பிக்கும் போது, விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை சமர்ப்பித்த பின்னர்,  புதுப்பிப்புக் கட்டணம் மற்றும் தாமத அபராதங்கள் போன்றவற்றின் விருப்ப பட்டியலைப் பெறுவீர்கள்.
  • அதில், பணம் செலுத்தும் பகுதிக்கு  சென்றபின், ‘exemption from Emirates ID delay’ என்பதைத் தேர்வு செய்யவும். 
  • சலுகை பெறுவதற்கான காரணத்தை தேர்வு செய்யவும்.
  • தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்கவும்.
  • சலுகை விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். 
  • உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது அல்லது நிராகரிக்கப்பட்டது என்பதை ICP மூலம் மின்னஞ்சல் மற்றும் SMS மூலம் அறிவிக்கப்படும்.
TAGGED: