துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) பெயரிடும் உரிமைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சமீப ஆண்டுகளில் பல மெட்ரோ நிலையங்கள் மறுபெயரிடப்பட்டுள்ளன. இந்த புதுப்பெயர்களால் பயணிகளுக்கு குழப்பம் ஏற்படாமல் இருக்கும் வகையில், இந்தக் கட்டுரை துபாய் மெட்ரோவின் பெயர் மாற்றப்பட்ட நிலையங்கள், அதற்கான காரணங்கள், வழித்தடங்கள் மற்றும் 2029-ல் வரவிருக்கும் நீல நிற வழித்தடம் விரிவாக்கம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் விளக்குகிறது.
மெட்ரோ நிலையங்கள்:
துபாயில் மெட்ரோவில் மொத்தம் 55 நிலையங்கள் உள்ளன. சிவப்பு நிற வழித்தடத்தில் 35 நிலையங்களும், பச்சை நிற வழித்தடத்தில் 20 நிலையங்களும் உள்ளன.
இதில் ஒன்பது நிலத்தடி நிலையங்கள் (Underground Stations) அடங்கும். நீல நிற வழித்தடம் 2029ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இது 14 புதிய நிலையங்கள் அமைகின்றன. கடந்த ஆண்டுகளில் பல மெட்ரோ நிலையங்கள் மறுபெயரிடப்பட்டுள்ளன.
| ஆண்டு | மெட்ரோ நிலையத்தின் முந்தைய பெயர் | தற்போதைய பெயர் |
| 2025 | UAE எக்ஸ்சேஞ்ச் மெட்ரோ | லைஃப் பார்மசி மெட்ரோ |
| 2025 | GGICO மெட்ரோ | அல் கர்ஹூத் மெட்ரோ |
| 2025 | அல் கெயில் மெட்ரோ நிலையம் | அல் ஃபர்தான் எக்ஸ்சேஞ்ச் |
| 2024 | மஷ்ரேக் மெட்ரோ நிலையம் | InsuranceMarket.ae |
| 2023 | அல் சஃபா மெட்ரோ நிலையம் | Onpassive |
| 2022 | உம் அல் ஷீஃப் மெட்ரோ நிலையம் | ஈக்விட்டி |
| 2021 | அல் ரஷிதியா மெட்ரோ நிலையம் | சென்டர்பாயிண்ட் |
| 2021 | அல் ஜஃப்லியா மெட்ரோ நிலையம் | மேக்ஸ் |
| 2021 | துபாய் மரினா மெட்ரோ நிலையம் | சோபா ரியால்டி |
| 2020 | ஜுமைரா லேக்ஸ் டவர்ஸ் மெட்ரோ நிலையம் | துபாய் மல்டி கமாடிடிஸ் சென்டர் |
| 2020 | நகீல் ஹார்பர் மெட்ரோ நிலையம் | ஜெபல் அலி |
| 2020-க்கு முன் | ஜெபல் அலி மெட்ரோ நிலையம் | UAE எக்சேஞ்ச் |
| 2020-க்கு முன் | Palm Deira மெட்ரோ நிலையம் | Gold Souq |
| 2020-க்கு முன் | Al Fahidi மெட்ரோ நிலையம் | Sharaf DG |
பெயர் மாற்றங்களுக்கான காரணம்:
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) சமீபத்தில் அல்கைல் மெட்ரோ நிலையத்தின் பெயரிடும் உரிமைகளை அல்ஃபர்தான் எக்சேஞ்சுக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன் மூலம் அந்த நிறுவனம் அந்நிலையத்தில் தனித்துவமான பிராண்டிங் பிரதிநிதித்துவத்தை பெறுகிறது.
துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் தனது பெயரிடும் உரிமைத் திட்டத்தை 2008ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தியது. இது பொது-தனியார் கூட்டாண்மைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அதிக எண்ணிக்கையிலான பயணிகள் நடமாட்டம் உள்ள மெட்ரோ நிலையங்களில் பெயர்களை மாற்றுவதன் மூலம் நிறுவனங்கள் தங்கள் பிராண்ட்களுக்கு பரவலான அங்கீகாரத்தைப் பெறுகின்றன.
