2025 ஹஜ்: நுசுக் தளத்தில் பல்வேறு வசதிகளுடன் ஹஜ் தொகுப்புகள் அறிமுகம்!

மோசடி  கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் அடிப்படையில், சவூதி அரேபியா நுசுக் (Nusuk) தளத்தில் ஆறு அதிகாரப்பூர்வ ஹஜ் தொகுப்புகளை அறிமுகப்படுத்தியது. பயணிகள் பாதுகாப்பாகவும் சீரான முறையிலும் ஹஜ் செய்வதற்காக நுசுக் தளத்தை பயன்படுத்துமாறு அரசு வலியுறுத்தியுள்ளது. 

 சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் நிர்வகிக்கும் “நுசுக்” தளம், ஹஜ் மற்றும் உம்ரா சேவைகளுக்கான ஒருங்கிணைந்த மையமாக செயல்படுகிறது. இது  50-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்காக தனிப்பயனாக்கப்பட்ட ஹஜ் தொகுப்புகளை வழங்குகிறது. 

இதில் வழங்கப்படும் ஆறு வகையான ஹஜ் தொகுப்புகள், பயணிகளின் பட்ஜெட், சேவைத் தேர்வுகள் மற்றும் வசதிகளுக்கேற்ப வடிவமைக்கப்பட்டுள்ளன.

அடிப்படை தொகுப்பு (Standard):

குறைந்த செலவில் அனைத்து அடிப்படை சேவைகளுடன் ஒரு முழுமையான ஹஜ் அனுபவம் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்கும் இடம்: 

குறைந்தது 14 நாட்கள், 3 நட்சத்திர ஹோட்டல்/குடியிருப்பு

முகாம்கள்: 

மஜார் அல் கப்ஷ் அல்லது அல் முஅய்ஸிம்

அடிப்படை மாற்றும் தொகுப்பு (Standard Shifting):

குறிப்பிட்ட தொகையில் ஹஜ் அனுபவத்தை விரும்புவோருக்கு இடமாற்ற வசதியுடன் அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்கும் இடம்:

 3 அல்லது 4 நட்சத்திர ஹோட்டல்கள் / குடியிருப்புகள்

தங்கும் இடம் மாறக்கூடியது

முகாம்கள்: 

மஜார் அல் கப்ஷ் அல்லது அல் முஅய்ஸிம் 

பிரீமியம் தொகுப்பு (Premium):

வசதியும் ஆன்மீகமும் இணைந்த அனுபவம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

தங்கும் இடம்: 

குறைந்தது 10 நாட்கள், 4 நட்சத்திர ஹோட்டல்

சிறப்பு அம்சங்கள்: 

முக்கிய ஹஜ் இடங்களுக்கு நேர்த்தியான அணுகல்.

 பிரீமியம் மாற்றும் தொகுப்பு (Premium Shifting):

உயர்தர சேவை மற்றும் இடமாற்ற வசதியுடன் சிறந்த ஹஜ் அனுபவம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்கும் இடம்: 

14 நாட்கள், 3 அல்லது 4 நட்சத்திர ஹோட்டல்கள்/குடியிருப்புகள்

வசதிகள்: 

கட்டுப்பாடு, அமைதி, ஏற்பாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்தவை

ஆடம்பர தொகுப்பு (Luxury):

உயர்தர சேவைகள் மற்றும் சிறந்த வசதிகளுடன்   ஹஜ் அனுபவம்  வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்கும் இடம்:

10 நாட்கள், 5 நட்சத்திர ஹோட்டல்

அம்சங்கள்: 

ஆன்மீக நிகழ்வுகளுக்கான நேரடி அணுகல், தனித்தன்மை வாய்ந்த சேவை.

ஆடம்பர மாற்றும் தொகுப்பு (Luxury Shifting):

பணக்கார பயணிகளுக்கான இடமாற்ற வசதியுடன் கூடிய  ஹஜ் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தங்கும் இடம்:

 14 நாட்கள், 4 அல்லது 5 நட்சத்திர ஹோட்டல்கள்/குடியிருப்புகள்.

வசதிகள்: 

உயர்நிலை சேவைகள், வசதியான இடமாற்றங்கள், விரிவான ஏற்பாடுகள்.

அரசின் அறிவுரை:

 2025 ஹஜ் பயணத்துக்கான ஆயத்தங்களை தொடங்கியுள்ளது. பயணிகள் அனைவரும் அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் (நுசுக்) மூலம் மட்டுமே பதிவு செய்ய, விசா, பயண மற்றும் தங்கும் நேரத்தை கடைபிடிக்க, சரியான தொகுப்புகளை திறமையாகத் தேர்ந்தெடுக்க சவூதி அரேபியா அரசு வலியுறுத்தியுள்ளது.

TAGGED: