அமீரகத்தில் மே மாதம் இதுவரை இல்லாத வெப்பநிலை 2025 மே மாதத்தில் பதிவாகியுள்ளது

அமீரகத்தில் மே மாதத்தில் கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வெப்பநிலை இந்த ஆண்டு மே மாதம் பதிவாகியுள்ளது. மே 24-ஆம் தேதி அபுதாபியில் உள்ள அல் ஐன் பகுதிக்கு அருகே உள்ள ஸ்வீஹான் பகுதியில் 51.6°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. 

இதுவரை இல்லாத மே மாத வெப்பநிலை

இந்த ஆண்டு மே 24-ஆம் தேதி பதிவான 51.6°C வெப்பநிலை, 2003-ஆம் ஆண்டு வானிலை பதிவு தொடங்கியதிலிருந்து மே மாதத்தில் பதிவான மிக அதிகபட்ச வெப்பநிலையாகும். இதற்குமுன் 2009-ஆம் ஆண்டு அல் ஷவாமெக் பகுதியில் பதிவான 50.2°C வெப்பநிலையை அதிகபட்சமாக இருந்தது.

தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) அறிக்கையின் படி அமீரகத்தில் கடந்த காலங்களை ஒப்பிடும்போது வெப்பநிலை வழக்கமானதை விட 1.5°C அதிகமாக உயர்ந்துள்ளது. இது உலகளாவிய காலநிலை மாற்றத்தின் போக்கைப் பிரதிபலிக்கிறது. 

மே மாதத்தில், அமீரகத்தில் பதிவு செய்யப்பட்ட சராசரி அதிகபட்ச வெப்பநிலை 40.4°C ஆக இருந்தது. இது கடந்த 2003 முதல் 2024 வரையிலான ல சராசரி 39.2°C-ஐ விட குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாககும். இந்த மாற்றம் அமீரகத்தின் வானிலையை எவ்வாறு பாதிக்கிறது என்பதை தெளிவாக காட்டுகிறது.

தெற்குப் பகுதிகளிலிருந்து உருவாகும் குறைந்த அழுத்த அமைப்புகள் உட்பட பல்வேறு வளிமண்டல நிலைமைகளே இந்த தீவிர வெப்பத்திற்குக் காரணம் என்று வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். வரும் நாட்களில் அதிக வெப்பநிலை நீடிக்கும் என்றும், மேலும் அதிகரிக்கும் என வானிலை அறிவிப்புகள் தெரிவிக்கின்றன.

மாற்றம் தரும் வானிலை – மாறிவரும் புவி சூழ்நிலை நிலைகள்

ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை (C3S) தகவல்படி, கடந்த மாதம் உலகின் இரண்டாவது வெப்பமான மே மாதமாகப் பதிவாகியுள்ளது. இதன் காரணமாக, வடக்கு அரைக்கோளத்திற்கு இது ஒட்டுமொத்தமாக இரண்டாவது வெப்பமான வசந்த காலமாக மார்ச் மற்றும் மே மாதங்கள் அமைந்தது. இந்த கடும் வெப்பநிலை, உலகம் முழுவதும் பல வானிலை சம்பவங்களை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, கிரீன்லாந்தில் வரலாறு காணாத வெப்பம் பதிவாகியுள்ளது, இது தற்போதைய காலநிலை மாற்றப் போக்குகளின் பரவலான தன்மையை எடுத்துக்காட்டுகிறது.

TAGGED: