உலகளாவிய சுற்றுலா வளர்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமீரகம்; துபாய் ஆட்சியாளர் பெருமிதம்!

உலக பயண மற்றும் சுற்றுலா கவுன்சில் (World Travel and Tourism Council) வெளியிட்ட அறிக்கையின் படி, 2024ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரக சுற்றுலா துறை மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்தத் துறை, AED 257.3 பில்லியன் அளவுக்குப் பொருளாதாரத்தில் 13% பங்களிப்பு அளித்துள்ளது. இது 2023-ஐ விட 3.2% உயர்வாகும்.

உலகளாவிய அளவில் முன்னிலை:

உலகளவில் ஒப்பிடுகையில் இது பொருளாதார வளர்ச்சிக்கு சுற்றுலாவின் பங்களிப்பு அடிப்படையில் மிக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாகும்.

ஆட்சியாளர் பாராட்டு:

துபாய் ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், இத்துறையின் சாதனைகளைப் பாராட்டியுள்ளார். மேலும் அவர், “நமது தேசிய பொருளாதாரத்தின் வலிமை மற்றும் பன்முகத்தன்மைக்கான புதிய குறியீடாக, WTTC அறிக்கை ஐக்கிய அரபு அமீரக சுற்றுலாத் துறையின் விதிவிலக்கான சாதனைகளை எடுத்துக்காட்டுகிறது.

சர்வதேச & உள்நாட்டு சுற்றுலாச் செலவினங்கள்:

கடந்த ஆண்டு சர்வதேச பார்வையாளர்களின் செலவு AED 217 பில்லியனைத் தாண்டியுள்ளது. உள்நாட்டு சுற்றுலா செலவு AED 57 பில்லியனை எட்டியுள்ளது.  நூற்றாண்டுகளாக சுற்றுலா துறையில் முன்னிலை வகித்த நாடுகளை பின்னுக்கு தள்ளி, சர்வதேச சுற்றுலாப் பயணிகள் செலவில் உலகின் முன்னணி ஏழு நாடுகளில் இடம் பெற்றுள்ளது ஐக்கிய அரபு அமீரகம். 

நாங்கள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கிறோம், முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் மகிழ்ச்சியடைகிறோம், திறமைகளை அரவணைக்கிறோம், வாழ்வதற்கும், சுற்றுலா செய்வதற்கும், வருகை தருவதற்கும் சிறந்த சூழலை உருவாக்குகிறோம். உலகிற்கு வருக!” என்று தெரிவித்துள்ளார். 

சுற்றுலா வளர்ச்சியின் உத்தி & உள்கட்டமைப்பு:

அமீரகத்தின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் அப்துல்லா பின் தூக் அல் மார்ரி, சுற்றுலா அமீரக வளர்ச்சிக் குழுவின் முக்கியமான தூணாக விளங்குவதை விளக்கினார். அவர் கூறுகையில், “அமீரகம் உலகளவில் ஈர்க்கக்கூடிய சுற்றுலா இடமாக மாறுவதற்கான பல்வேறு திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

அதிக மின்னணு மற்றும் பயண உள்கட்டமைப்புகள், ஏழு எமிரேட்களிலும் முதலீட்டு வசதிகள் மற்றும் அமீரகத்தின் பண்பாட்டு பல்வகைமைகள் அனைத்தும் சுற்றுலா வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

அமீரக சுற்றுலா மூலோபாயம் 2031ன் நோக்கங்களை அடைய இது உறுதியாக முன்னேறி வருகிறது. இந்தத் திட்டம் சுற்றுலா துறையின் உள்தொகுப்பு பங்களிப்பை AED 450 பில்லியனாகவும், வருடத்திற்கு 40 மில்லியன் ஹோட்டல் விருந்தினர்களை வரவேற்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

சுற்றுலாவில் உலகளாவிய ஈர்ப்பு!

2024 ஆம் ஆண்டில், ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பல நாடுகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இதில், இந்தியாவின் பங்களிப்பு 14% ஆகும்.  இங்கிலாந்திலிருந்து 8%, ரஷ்யாவிலிருந்து 8%, சீனாவிலிருந்து 5%, சவுதி அரேபியாவிலிருந்து 5% மற்றும் உலகின் பிற நாடுகளிலிருந்து 60% சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர்.

2024-இல் சர்வதேச சுற்றுலா செலவு AED 217.3 பில்லியனாக  இருந்தது.  இது 2023ஐ விட 5.8% அதிகம். உள்நாட்டு சுற்றுலா செலவுகள் AED 57.6 பில்லியனாக இருந்தது. 2023ஐ விட 2.4% அதிகம்.

2025 முன்னறிக்கைகள்:

2025க்கான முன்னறிக்கையின்படி, சர்வதேச சுற்றுலா செலவுகள் 5.2% வளர்ச்சி பெற்று AED 228.5 பில்லியனாகவும், உள்நாட்டு செலவுகள் 4.3% உயர்ந்து AED 60 பில்லியனாகவும் இருக்கும் என WTTC தெரிவித்துள்ளது. மொத்த செலவில் 79% சர்வதேச சுற்றுலாப் பயணிகளால், 21% உள்நாட்டுப் பயணிகளால் வந்துள்ளது.

உலகளாவிய சுற்றுலா பங்களிப்பு:

உலகளவில், சுற்றுலா மற்றும் பயணத் துறை 2024-இல் உலக உள்தொகுப்புக்கு அமெரிக்க டாலர் 10.9 டிரில்லியன் அளவில் பங்களித்துள்ளது.

இது உலக பொருளாதாரத்தின் 10%. இது 2023ஐ விட 8.5% அதிகம். 2025இல் இந்த பங்களிப்பு அமெரிக்க டாலர் 11.7 டிரில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த அறிக்கை வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் இத்துறையின் வலுவான பங்கையும் எடுத்துக்காட்டியது. 2024 இல் உலகளவில் 356.6 மில்லியன் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இது மொத்த உலகளாவிய வேலைவாய்ப்பில் 10.6% ஆகும். இது 2023-ஐ விட 6.2% அதிகமாகும் மற்றும் 2019 ஐ விட 5.6% அதிகமாகும்.