‘Instant Licence’ சேவை அறிமுகம்: இனி ஷார்ஜாவில் தொழில் தொடங்குவது சுலபம்!

ஷார்ஜாவில் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்காக ‘Instant Licence’  என்ற புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது வணிக உரிமத்தை உடனடியாகப் பெற உதவுகிறது.

Instant Licence-in முக்கிய அம்சங்கள்:

குத்தகை ஒப்பந்தம் தேவையில்லை:

இந்த உரிமத்தைப் பெற முதல் ஆண்டுக்கு குத்தகை ஒப்பந்தம் அல்லது வாடகை ஒப்பந்தம் இணைக்கத் தேவையில்லை.

ஒரு நாளில் அனுமதி:

ஷார்ஜா பொருளாதார மேம்பாட்டுத் துறை (SEDD) இந்த சேவையை ஒரு நாளுக்குள் வழங்குகிறது.

பணியாளர் வரம்பு: 

இந்த உரிமம் மூலம் மூன்று ஊழியர்கள் வரை வேலை செய்யலாம்.

வணிக வளர்ச்சி:

இந்த சேவை முதலீட்டாளர்கள் தங்கள் வணிகத்தை உடனடியாகத் தொடங்கவும், செயல்முறைகளை விரைவுபடுத்தவும், ஷார்ஜாவின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இது எப்படி வேறுபடுகிறது?

சாதாரண உரிமங்களுக்கான வழக்கமான நடைமுறைகள் இந்த உடனடி உரிமத்திற்குப் பொருந்தாது. இந்த சேவை முதலாவது ஆண்டில் இது முதலீட்டாளர்களுக்கு உதவுகிறது. முதலீட்டாளர்களின் வணிகத்தைச் சுலபமாக்குகிறது. இரண்டாம் ஆண்டில் அவர்கள் வழக்கமான உரிமத்திற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்.

ஷார்ஜா வாணிப வளர்ச்சி துறையின் தலைவர் ஹமத் அலி அப்துல்லா அல் மஹ்மூத், ”ஷார்ஜாவின் பொருளாதார பல்வகைப்படுத்தல் மற்றும் நிலையான வளர்ச்சியை ஆதரிக்கும் துறை உத்தியின் ஒரு பகுதியாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது” என்றார்.

எளிமையான செயல்பாடுகள்:

பிற துறைகளின் அனுமதி தேவையில்லாத அனைத்து அலுவலகச் செயல்பாடுகளுக்கும் இந்த உரிமம் பொருந்தும்.