2025ல் இந்தியர்களுக்கு விசா இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள் – முழு விவரம்!

2021-ல் சிறிய பின்னடைவுக்குப் பிறகு, இந்தியப் பாஸ்போர்டின் தரவரிசை உயர்ந்து வருகிறது. இந்தியப் பாஸ்போர்ட் உலகளவில் 82வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், தற்போது வெளியான ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு 2025 தரவரிசையில், இந்தியப் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 59 நாடுகளுக்கு விசா இல்லாமல் அல்லது எளிய அனுமதி முறைகளில் பயணிக்க முடியும்.

இதன் மூலம் இந்தாண்டு உலகின் சக்திமிக்க பாஸ்போர்ட்களில் இந்தியா எட்டு இடங்கள் முன்னேறி 77வது இடத்தைப் பிடித்துள்ளது. விசா இல்லாமல் இந்தியர்கள் பயணிக்கக்கூடிய நாடுகளில் பிலிப்பைன்ஸ் மற்றும் இலங்கை இணைந்துள்ளன.

இவை பெரும்பாலும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் கரீபியன், பசிபிக் தீவுகளைக் கொண்டவை. சில நாடுகள் விசா ஆன் அரைவல் (VOA – Visa On arrival), இ-விசா, மின்னணு பயண அங்கீகாரம் (ETA – Electronic Travel Authority) ஆகிய எளிய முறைகளையும் வழங்குகின்றன.

விசா தேவைகள்: ஒரு பார்வை

ஒவ்வொரு நாட்டிற்கும் அதன் சொந்த நுழைவுக் கட்டுப்பாடுகள் உள்ளன. பொதுவாக, விசா தேவைகளில் உள்ள முக்கிய வேறுபாடு, பயணத்திற்கு முன் ஏதேனும் ஒரு வகையான ஒப்புதல் தேவைப்படுவதுதான். குறிப்பிட்ட விதிகள் மாறுபடலாம் என்றாலும், நாடுகள் பொதுவாக ஐந்து வகையான விசா கொள்கைகளில் ஒன்றைப் பின்பற்றுகின்றன:

விசா இல்லாத பயணம் (Visa-free):

விசா ப்ரீ என குறிப்பிடப்படும் இடத்திற்கும் நுழைய விசா அல்லது எந்த ஆவணமும் தேவையில்லை. செல்லுபடியாகும் பாஸ்போர்ட் மட்டுமே போதும்.

விசா தேவைப்படும் பயணம் (Visa required):

இத்தகைய இடங்களுக்கு பயணிக்க விரும்பும் பயணிகள், பயணத்திற்கு முன் விசா பெற வேண்டும். இந்த செயல்முறை பொதுவாக நேரில், சம்பந்தப்பட்ட நாட்டின் அருகிலுள்ள தூதரகங்கள் அல்லது துணைத் தூதரகங்களில் செய்யப்படுகிறது.

பல சமயங்களில், விசா சந்திப்புகள் அவசியமாகின்றன. மேலும் நீண்ட காத்திருப்பு நேரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. எனவே பயணிகள் முன்னதாகவே திட்டமிட அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விசா ஆன் அரைவல் (Visa on arrival – VOA):

’விசா ஆன் அரைவல்’ (VOA) என்று குறிப்பிடப்படும் இடங்களில், நாட்டிற்குள் நுழைய சட்டபூர்வமான விசா தேவைப்பட்டாலும், பயணிகள் சேரும் இடத்திலேயே விசா பெறலாம். அதாவது, பயணத்திற்கு முன் விசா அனுமதியோ அல்லது ஆவணங்களோ தேவையில்லை.

இந்த செயல்முறை பெரும்பாலும் சம்பந்தப்பட்ட இடத்தின் குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டில் நிறைவு செய்யப்படுகிறது. மேலும் விமான நிலையங்களில் இந்த செயல்முறைக்கு ஒரு தனிப் பிரிவு இருக்கும்.

இ-விசா (E-visa):

இ-விசாக்கள் என்பது இந்த இடங்களுக்கு விசாக்கள் தேவைப்பட்டாலும், செயல்முறை ஆன்லைனில் முடிக்கப்பட்டு இறுதி விசா மின்னணு முறையில் வழங்கப்படும் என்பதாகும். இந்த விருப்பம் பயணிகளுக்கு அதிக வசதியை வழங்குகிறது.

மின்னணு பயண அங்கீகாரம் (Electronic Travel Authority – ETA):

அனுமதி உள்ள நாடுகள், பயணத்திற்கு முன் பயணிகள் விசா பெற வேண்டும் என்று கோராவிட்டாலும், ஒரு தனி பயண அங்கீகார செயல்முறை தேவைப்படுகிறது. இந்த செயல்முறை பாரம்பரிய விசா விண்ணப்பங்களை விட வேகமானதாகவும், எளிமையானதாகவும் இருக்கும்.

இதனால் இந்த இடங்களுக்குப் பயணம் செய்வது மிகவும் எளிதாகிறது. இருப்பினும், மின்னணு பயண அங்கீகாரம் பொதுவாக குறுகிய கால தங்களுக்காக வடிவமைக்கப்பட்டவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சில விசாக்களின் கால அளவை ஒப்பிடும்போது இது வேறுபடலாம்.

இந்தியர்கள் விசா இல்லாமல் பயணிக்க கூடிய நாடுகள்:

ஹென்லி & பார்ட்னர்ஸ் (Henley & Partners) தகவலின்படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் பயணிக்கக்கூடிய நாடுகளின் முழு பட்டியல்:

விசா ஆன் அரைவல் நாடுகள்:

  • பொலிவியா
  • புருண்டி
  • கம்போடியா 
  • கேப் வெர்டே தீவுகள் 
  • கொமோரோ தீவுகள்
  • ஜிபூட்டி 
  • எத்தியோப்பியா
  • கினியா-பிசாவ்
  • இந்தோனேசியா
  • ஜோர்டான்
  • லாவோஸ்
  • மாலத்தீவுகள்
  • மார்ஷல் தீவுகள்
  • மங்கோலியா
  • மொசாம்பிக்
  • மியான்மர்
  • நமீபியா
  • பலாவ் தீவுகள்
  • கத்தார்
  • சமோவா
  • சியரா லியோனா
  • சோமாலியா
  • செயிண்ட் லூசியா
  • தான்சானியா
  • திமோர்-லெஸ்டே 
  • துவாலு
  • ஜிம்பாப்வே

மின்னணு பயண அங்கீகாரம்

  • கென்யா (ETA)
  • சீஷெல்ஸ் (ETA)
  • செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் (ETA)

விசா ப்ரீ நாடுகள்:

  • அங்கோலா
  • பார்படாஸ்
  • பூட்டான்
  • பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள்
  • குக் தீவுகள்
  • டொமினிகா
  • பிஜி
  • கிரெனடா
  • ஹைதி
  • ஈரான்
  • ஜமைக்கா
  • கஜகஸ்தான்
  • கிரிபட்டி
  • மக்காவ் (SAR சீனா)
  • மடகாஸ்கர்
  • மலேசியா
  • மொரிஷியஸ்
  • மைக்ரோனேஷியா
  • மொன்செராட்
  • நேபாளம்
  • நியுவே
  • ருவாண்டா
  • செனகல்
  • செயிண்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ்
  • தாய்லாந்து
  • டிரினிடாட் மற்றும் டொபாகோ
  • வனுவாட்டு
  • பிலிப்பைன்ஸ்
  • இலங்கை