ஷேக் சயீத் திருவிழா..பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்கள்..அன்று என்னவெல்லாம் நடக்கும்..முழு விவரம்

அபுதாபியின் முக்கிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்றான, ஷேக் சயீத் திருவிழா, வரும் நவம்பர் -1 ஆம் தேதி தொடங்கி 142 நாட்களுக்கு அல் வத்பா பகுதியில் நடைபெறவுள்ளது. இதற்கான நுழைவு கட்டணம் AED 10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

ஷேக் சயீத் திருவிழா என்றால் என்ன?

ஷேக் சயீத் திருவிழா என்பது ஐக்கிய அரபு அமீரகத்தின் செழித்த பண்பாட்டின் சிறப்பினை கொண்டாடும் விழாவாகும். இதில் அப்பகுதி மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் கொண்டாடப்படுகின்றன.

இந்த திருவிழாவில் என்ன நடக்கும்?

தாவ் படகு (அரபு கடல் படகு) போட்டிகள், பாலூன் குதிரை, மற்றும் ஒட்டக பந்தயங்கள் நடைபெறும். இந்த திருவிழாவில் பல சிறிய திருவிழாக்களும் உள்ளன. கிழக்கு ஆசிய உணவுக் கடைகள், குழந்தைகள் ரசிக்கும் கார்டூன் கதாபாத்திரங்கள் போன்றவை இதில் இடம் பெற்றிருக்கும்.

சாகச விரும்பிகளுக்கு..

சாகசத்தை விரும்பும் நபர்களுக்கு, ஒரு சூப்பரான ஹெலிகாப்டர் அனுபவம் காத்திருக்கும். மேலும், பறந்துகொண்டே உணவை ருசிக்க, பறக்கும் உணவகமும் அங்கிருக்கும்.

இந்த திருவிழாவின் மற்றொரு சிறப்பு, ஒரே இடத்தில் பல்வேறு விதமான உயிருள்ள விலங்குகள் மற்றும் பறவைகளை நேரில் பார்த்து ரசிக்க முடியும்

இசை விரும்பிகளுக்கு..

அரபு பாடகர்கள் மற்றும் கலைஞர்கள் பாரம்பரிய இசைகளிலிருந்து, தற்காலிக ஹிட்ஸ் வரை அனைத்து பாடல்களையும் பாடுவார்கள். இசை விரும்பிகளுக்கு ஒரு முழு இசை விருந்தே அங்கு காத்திருக்கும்.

கார் விரும்பிகளுக்கு..

கார் விரும்பிகளுக்கு இந்த திருவிழா மிகவும் பிடித்த ஒன்றாக மாறிவிடும். காரணம் அங்கு ஏராளமான புது கார்கள் மற்றும் புதுப்பிக்கப்பட்ட பழைய கார்கள் மற்றும் அதன் இன்ஜின்கள் கூட காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

கின்னஸ் சாதனை!

இது மட்டுமின்றி 5,000 ட்ரோன்கள் கொண்டு இரவு வானில் ஒளிரும் காட்சிகளுடன், லேசர் காட்சிகளும் ஒளிபரப்பப்படும். கடந்த ஆண்டு இந்த நிகழ்வு கின்னஸ் சாதனையில் கூட இடம்பெற்றிந்தது. மேலும் உலகெங்கும் உள்ள கலாச்சாரங்களை ஒருங்கிணைக்கும் வகையில் இந்த திருவிழா இருக்கும்.

இப்படி எல்லோருக்குமான இந்த திருவிழா இந்த ஆண்டு வரும் நவம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இந்த திருவிழாவை கண்டுகளிக்க அபுதாபி மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள். அப்போ நீங்க எப்படி?