7வது சீசனுக்கான துபாய் சஃபாரி பூங்காவின் திறப்பு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!

துபாய் சஃபாரி பூங்காவின் 7வது சீசன் வருகிற அக்டோபர் மாதத்தில் தொடங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

துபாய் சஃபாரி பூங்கா

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தில் மூடப்படும் துபாய் சஃபாரி பூங்கா, அதன் பின் குளிர்காலம் தொடங்கும் காலத்தில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படுவது வழக்கம். அதன் வகையில் துபாய் சஃபாரி பூங்காவின் 7வது சீசன் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்க உள்ளதாக பூங்காவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

முந்தைய சீசன் கடந்த ஜூன் மாதத்தில் நிறைவடைந்த நிலையில் பார்வையாளர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் 16 சதவீதம் அதிகரித்து மொத்தம் 52,700 க்கும் மேற்பட்ட சஃபாரி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இங்கு பார்வையாளர்கள் 3,000க்கும் மேற்பட்ட விலங்குகள் வசிக்கும் ஆறு தனித்துவமான மண்டலங்களை பார்வையிட முடியும். இரண்டு சஃபாரி பயணத்தில் 15 வனவிலங்குகளை நெருக்கமாக பார்வையிடலாம். மேலும் பூங்காவை சுற்றி பார்க்க ஷட்டில் ரயில் (Shuttle Train) வசதியும் உள்ளது. 

சிறப்பம்சங்கள்

  • சஃபாரி அட்வென்ச்சர்ஸ்: பார்வையாளர்கள் அரேபிய ஓரிக்ஸ் மற்றும் சாண்ட் கஸல் போன்ற அரேபிய தீபகற்பத்தின் வனவிலங்குகள் அதன் வரலாறு குறித்து 15 நிமிட டிரைவ்-த்ரூ சுற்றுப்பயணத்தை அனுபவிக்கலாம். 
  • சஃபாரி சுற்றுலா: இதில் 35 நிமிடங்களுக்கு சஃபாரி அழைத்து அழைத்து செல்லப்படும் பார்வையாளர்கள் 35க்கும் மேற்பட்ட வனவிலங்குகளை பார்வையிடுவார்கள். சஃபாரியில் உடன் வரும் வழிகாட்டி நபர்கள் விலங்குகள் குறித்த சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொள்வார்கள். 
  • விலங்கு காட்சி: வனவிலங்குகளின் இயற்கை சூழலை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் 3,000 க்கும் மேற்பட்ட விலங்குகளை காணும் வாய்ப்பு அமையும். 
  • விலங்குகளுடன் ஊடாடலம்: பார்வையாளர்கள் விலங்குகளுக்கு உணவளிப்பது போன்ற ஊடாடும் அனுபவங்களில் ஈடுபடலாம்.

டிக்கெட்டுகள் மற்றும் பேக்கேஜ்கள் குறித்த தகவல் விரைவில் வெளியிடப்படும் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.