போக்குவரத்து புகார்களுக்கு புதிய சேவையை RTA அறிமுகம் செய்துள்ளது

துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் பொதுமக்கள் தங்களது புகார்களை தெரிவிக்க மடினாட்டி எனும் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மடினாட்டி சேவை

சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), “மஹ்பூப்” என்ற சாட்பாட் மூலம் வாட்ஸ்அப்பில் “மடினாட்டி” என்ற ஸ்மார்ட் புகாரளிப்பு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை மூலம் பேருந்து வழித்தடங்கள், பேருந்து நிறுத்தங்கள், போக்குவரத்து சிக்னல்கள், திசை குறிக்கும் பலகைகள், நடைபாதை வசதிகள் போன்ற போக்குவரத்து புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

மடினாட்டி சேவையின் பயன்பாடு

உங்கள் புகாரை புகைப்படத்துடன் நேரடியாக வாட்ஸ்அப்பில் அனுப்பலாம். இதனால் புகார் நடைமுறை வேகமாகவும், எளிதாகவும் நடைபெறும். இதில் அனுப்பப்படும் புகார்கள் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் உங்கள் புகார்களுக்கு விரைவில் பதில் கிடைக்கும். 

இதுகுறித்து RTAவின் கார்ப்பரேட் நிர்வாக ஆதரவு சேவைகள் துறையின் வாடிக்கையாளர் மகிழ்ச்சியின் இயக்குநர் மீரா அல் ஷேக் கூறுகையில், “வாட்ஸ்அப்பில் “மஹ்பூப்” சாட்போட் மூலம் மடினாட்டி என்ற ஸ்மார்ட் ரிப்போர்ட்டிங் சேவையை அறிமுகப்படுத்துவது, அமீரகம் முழுவதும் போக்குவரத்துப் பிரச்சனைகளைப் புகாரளிப்பதிலும் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாப்பதிலும் சமூகப் பங்களிப்பை மேம்படுத்துவதில் RTAவின் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டு முதல் ஆறு மாதங்களில் RTA-வின் மடினாட்டி சேவை மூலம் வாடிக்கையாளர் சேவை மையத்தில் 6,525 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த தளம் உள்கட்டமைப்பு மற்றும் சாலை போக்குவரத்து தொடர்பான புகார்களை ஏற்றுக்கொள்கிறது.