கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை; அமீரகத்தின் இன்றைய வானிலை அறிக்கை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை: 

இன்று (செப்.25) இரவும், நாளை காலையிலும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய வானிலை மையம் (NCM) கடல் சீற்றத்திற்கான எச்சரிக்கைகளை வெளியிட்டுள்ளது. அரேபிய வளைகுடாவில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும், ஓமன் கடலில் மிதமான அலைகளுடன் அமைதியாகவும் இருக்கும்.

தூசி நிறைந்த வானம்:

ஐக்கிய அரபு அமீரகத்தில் பகல் நேரத்தில், குறிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளில், வானம் தூசி நிறைந்ததாகவும், ஓரளவு மேகமூட்டத்துடனும் காணப்படும். கடல் பகுதியில், காற்றின் வேகம் மணிக்கு 15 முதல் 25 கிமீ வரையிலும், சில சமயங்களில் மணிக்கு 40 கிமீ வரையிலும் எட்டலாம்.

வெப்பநிலை

தூசுடன் காற்று வீசும் என்பதால் வாகன ஓட்டிகள் சாலையில் கவனமாக இருக்க வேண்டும். ஒவ்வாமை உள்ளவர்களும் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்று, கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை குறையும். உள்நாட்டுப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 37-41°C ஆகவும், கடலோரப் பகுதிகளில் 34-37°C ஆகவும், மலை பகுதிகளில் 29-34°C ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த செப்.22ஆம் தேதி உள்நாட்டுப் பகுதிகளில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடனும், அவ்வப்போது தூசியுடனும் காணப்படும். உள்நாட்டுப் பகுதிகளில் வெப்பநிலை சற்று குறையும் என  தேசிய வானிலை மையம் தகவல் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

TAGGED: