iPhone 17 சீரிஸ் மற்றும் ஏர் மாடல்களின் விற்பனை தொடங்கிய நிலையில், செப்.19 அன்று, தன்னிடம் பணிபுரியும் ஊழியர்களுக்கு பரிசளிப்பதற்காக 12 ஐபோன்களை துபாயை சேர்ந்த முகமது டேனிஷ் என்ற தொழிலதிபர் வாங்கியுள்ளார்.
iPhone 17 சீரிஸ் விற்பனை:
iPhone 17 சீரிஸ் போன்களின் கடந்த செப்.9 அன்று அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் முன்பதிவு செப்.12 அன்று தொடங்கியது. இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் அதன் iPhone 17 சீரிஸ் போன்களின் நேரடி விற்பனையை செப்.19 அன்று தொடங்கியது.
முன்பதிவு செய்தவர்களுக்கே iPhone:
ஐபோன் பயனர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 17 சீரிஸ் போன்களின் விற்பனை துபாய் மாலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் செப்.19 முதல் தொடங்கிய நிலையில், முதல் நாளில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே விற்பனை நடைபெற்றது. இதனால் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.
இதில் பலரும் பல iPhone-களை வாங்கி சென்றனர். கடந்த ஆண்டு துபாய் மாலில் உள்ள ஆப்பிள் ஸ்டோரில் iPhone 16 சீரிஸ் போன்களின் விற்பனை அனைவருக்கும் நடைபெற்றதால், கூட்டம் கூடுவதைத் தடுக்க இந்த ஆண்டு முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே முதல் நாளில் iPhone 17 சீரிஸ் போன்கள் விற்பனை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்களுக்கு பரிசளிப்பதற்காக iPhone வாங்கிய தொழிலதிபர்!
இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது டேனிஷ் என்பவர் iPhone 17 சீரிஸ் அறிமுகமான செப்.19 அன்று, தனது ஊழியர்களுக்குப் பரிசளிக்க 12 புதிய ஐபோன்களை வாங்கினார். இதில் iPhone Air மற்றும் Pro Max மாடல்களும் அடங்கும்.
பலர் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக புதிய சாதனங்களை வாங்க வந்தபோது, முகமது டேனிஷ் தனது ஊழியர்களுக்குப் பரிசளிப்பதற்காக அவற்றை வாங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், “பல்வேறு நபர்கள் மூலம் முன்பதிவு செய்து இந்த ஐபோன்களை நான் வாங்கினேன். இது எனது குழுவினருக்கு வெகுமதி அளிப்பதற்கான ஒரு சிறந்த வழி” என்று கூறினார்.
