அபுதாபியில் நீரில் மிதக்கும் ஹோட்டல், அக்டோபரில் துவக்கம்!

அபுதாபி, யாஸ் மரீனாவில் 31 அறைகள் கொண்ட நீரில் மிதக்கும்  ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ஒரு இரவிற்கு தங்குவதற்கு AED 990 முதல் வாடகை தொடங்குகிறது.

அபுதாபியில் முதல் மிதக்கும் ஹோட்டல்

அபுதாபியில் முதல் முறையாக நீரில் மிதக்கும் ஹோட்டல் தொடங்கப்பட்டுள்ளது. இது தற்போது யாஸ் மரீனாவில் நின்று கொண்டிருக்கிறது. இந்த சொகுசு படகை (Superyacht) டச் ஓரியண்டல் மேகாயாட்ஸ் (Dutch Oriental Megayachts) என்ற நிறுவனம் இயக்குகிறது. 

ஹோட்டலின் சிறப்பம்சங்கள்:

இது சாதாரண படகுபோல் இல்லாமல், பல அறைகள், ஒரு மேல் மாடி டெரஸ் மற்றும் வி.ஐ.பி ஸ்யூட் அறைகள் உள்ளன. இதில் 24 சாதாரண அறைகள், 4 விஐபி அறைகள்  மற்றும் மூன்று அறைகள் பிரத்யேகமான குளியல் தொட்டியுடன் (hot tubs) உள்ளன. இந்த அறைகளுக்கான வாடகை ஒரு இரவிற்கு AED 990 முதல் தொடங்குகிறது.

இதனை தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு வாடகைக்கும் எடுத்து கொள்ளலாம். இதனை அக்டோபர் மாதத்தில் திறக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து யாஸ் அசெட் மேனேஜ்மெண்ட் நிறுவனத்தின் ஜெனரல் மேனேஜர் ஜாஸிம் அல்பஸ்தாகி கூறுகையில், “ஆர்க்கிட் ஓவர்நைட் ஹோட்டலின் தொடக்கம் அபுதாபியின் ஹோட்டல் துறையில் புதிய அத்தியாயத்தை உருவாக்கியுள்ளது. இதை யாஸ் மரீனாவில் நடத்துவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.

இந்த சூப்பர்யாக்டின் ( Superyacht) அழகும், சுகாதாரா வசதிகளும் சேர்ந்து பொதுமக்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்குகிறது. அபுதாபி மற்றும் துபாய்க்கு எளிதாக சென்றடைவதற்கு வசதியாக இந்த இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இது போன்ற திட்டங்கள், யாஸ் ஐலண்ட் உலகளாவிய அளவில் சிறந்த விடுமுறை மற்றும் பொழுதுபோக்கு இடமாக உருவாகும் என்ற பாதையை வலுப்படுத்துகின்றன” எனக் கூறினார்.

இந்த மிதக்கும் ஹோட்டலில் தங்கும் விருந்தினர்களுக்கு உணவு, வரவேற்பு சேவை (concierge services) மற்றும் சன் டெக் போன்ற வசதிகள் கிடைக்கும்.  

துபாய் நகரத்தில் தற்போது உலகின் மிக உயரமான ஹோட்டல் விரைவில் திறக்கப்பட உள்ளது. சீல் துபாய் மெரினா என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல், இந்தாண்டு இறுதியில் திறக்கப்பட உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.