வாரந்தோறும் துபாயில் இலவசமாக சினிமா பார்க்கலாம்! எங்கு தெரியுமா?

துபாயில் உள்ள JLT பூங்காவில் அடுத்த ஆண்டு பிப்.14 வரை ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7:30 மணிக்கு இலவசமாக திரைப்படம் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

திறந்தவெளி சினிமா:

‘Cinema Under The Stars’ நிகழ்வு இந்த அக்டோபரில் மீண்டும் வரவிருக்கிறது. குடியிருப்பாளர்களை ஒன்றிணைத்து, சமூக உணர்வை வளர்க்கும் நோக்கில், JLT பூங்கா ஒரு அற்புதமான திறந்தவெளி சினிமாவாக மாற உள்ளது. 

வாராந்திர  கொண்டாட்டம்!

அக்டோபர் 18, 2025 முதல் தொடங்கி, பிப்ரவரி 14, 2026 வரை, ஒவ்வொரு சனிக்கிழமையும் மாலை 7:30 மணிக்குப் பிறகு,  பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய பல்வேறு பிரபல திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. 

திரையிடப்படும் திரைப்படங்கள்: 

அக்.18, 2025 – – The Wild Robot

அக்.25, 2025 –  Puss in Boots: The Last Wish

நவ.1, 2025 – Hotel Transylvania 2

நவ.8, 2025 – Kung Fu Panda 2

நவ.15, 2025 – Finding Dory

நவ.22, 2025 – Wicked

நவ.29, 2025 – Karate Kid: Legends

டிச.6, 2025 – Sonic the Hedgehog 1

டிச.13, 2025 – Coco

டிச.20, 2025 – Nightmare Before Christmas

டிச.27, 2025 – Home Alone 2

ஜன.3, 2025 – The Greatest Showman

ஜன.10, 2025 – Wonka

ஜன.17, 2025  – Despicable Me 1

ஜன.24, 2025 – Lilo & Stitch

ஜன.31, 2025  – Spider-man: Homecoming

பிப்.7, 2025 – Brave

பிப்.14, 2025 – Wall E 

கட்டணம்/ முன்பதிவு: 

இங்கு திரையிடப்படும் திரைப்படங்களை பார்ப்பதற்கு  கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. ஆனால் பதிவு செய்ய வேண்டியது அவசியம். அதற்கு வலைதளத்திற்கு சென்று திரையிடப்படவுள்ள 

திரைப்படங்களின் பட்டியலில், நீங்கள் பார்க்க விரும்பும் திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்வதன் மூலம் உங்கள் இருக்கையை உறுதி செய்து, பதிவு செய்து கொள்ளலாம். 

முன்பதிவு & முழு விவரம்: https://jlt.ae/whats-on/cinema-under-the-stars-2025