ஐக்கிய அரபு அமீரகத்தில் சில பகுதிகளில் இன்று மேகமூட்டமான வானம் மற்றும் வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க குறைவு இருக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை:
தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) கூற்றுப்படி, வானம் மேகமூட்டமாக இருக்கும், குறிப்பாக மேற்கு மற்றும் கடலோரப் பகுதிகளில் காலை காலை நேரத்தில் வானம் மேகமூட்டமாக காணப்படும். நாட்டின் மேற்கு பகுதியில் வெப்பநிலை படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் மேற்குப் பகுதிகளில் அதிகபட்ச பகல் நேர வெப்பநிலை சுமார் 36°C ஐ எட்டும், அதே சமயம் இரவு நேரத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை சில உட்பகுதி மற்றும் மலைப் பகுதிகளில் 17°C வரை குறையலாம். துபாயில் தற்போது 26°C வெப்பநிலை, பெரும்பாலும் வெயில் மற்றும் காற்றுடன் கூடிய வானிலை நிலவும்.
காற்றின் வேகம்:
நேற்று காலை நாட்டில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை 13.7°C ஆகும், இது ரக்னா (அல் ஐன்) பகுதியில் காலை 06:45 மணிக்கு பதிவானது. அதிகபட்ச ஈரப்பதம் 85 சதவிகிதம் வரை உயரக்கூடும். இதனால் இரவு நேரங்களில் சில பகுதிகளில் மூடுபனி அல்லது பனிமூட்டம் உருவாகும் வாய்ப்பு அதிகம்.
காற்றின் வேகம் மணிக்கு 10–25 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். திறந்தவெளிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்தை எட்டும். இரவில் காற்றின் வேகம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடல் நிலை:
அரபிக் மற்றும் ஓமன் கடலில் அலைகள் மிதமாக இருக்கும்.
கடந்த வாரம் அக்.28 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
