அமீரகத்திற்கு வருகை புரிந்த எலான் மஸ்க், தலைவர்களுடன் சந்திப்பு:
தொழில் முறை பயணமாக கடந்த டிச.21,2025 அன்று அமீரகம் வந்த தொழிலதிபர் எலான் மஸ்க் அபுதாபியில் உள்ள சயீத் தேசிய அருங்காட்சியகத்தில் அமீரக அதிபர், துபாய் மற்றும் அபுதாபி இளவரசர்களை சந்தித்தார். ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் டிச.21 அமீரகத்திற்கு வந்திருந்தார்.
அப்போது அபுதாபியில் உள்ள சயீத் தேசிய அருங்காட்சியகத்திற்கு சென்ற மஸ்க் அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள், துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் மற்றும் அபுதாபி இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்தார். இந்த சந்திப்பில் எதிர்கால தொழில்நுட்பங்கள் மற்றும் அமீரகத்தின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அமீரகத்தில் குறையும் பகல் நேரம்:
அமீரகத்தில் குளிர்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 20 வரை நீடிக்கும். இந்த காலகட்டத்தில் பகல் நேரம் குறைவாகவும், இரவு நேரம் அதிகமாகவும் இருக்கும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நேற்று (டிச. 21) அமீரக நேரப்படி மாலை 7:03 மணிக்கு தொடங்கிய குளிர்காலம் அடுத்த ஆண்டு மார்ச் 20 வரை நீடிக்கும். இதனால் இரவு நேரத்தில் வெப்பநிலை 5°C க்கும் குறைவாக குறையக்கூடும் என்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமீரகத்தின் கடலோரப் பகுதிகளில் வெப்பநிலை 15°C வரை குறையலாம். ஜெபல் ஜெய்ஸ் போன்ற மலைப் பகுதிகளில் வெப்பநிலை 0°C-க்கு கீழ் செல்லவும் வாய்ப்புள்ளது. பொதுவாக, டிசம்பர் முதல் பிப்ரவரி நடுப்பகுதி வரை கடும் குளிர் நிலவும். இந்த காலக்கட்டத்தில் பகல் நேர வெப்பநிலை சராசரியாக 25°C ஆகவும், இரவு நேரங்களில் 12°C ஆகவும் இருக்கும்.
தங்க கார் வெல்ல வாய்ப்பு!
துபாய் கோல்ட் சூக்கில் உள்ள கடைகளில் பிப். 8 வரை AED 500 அல்லது அதற்கு மேல் நகை வாங்குபவர்களில் ஒருவருக்கு குலுக்கல் முறையில் Gold Mercedes-Benz S-Class 500 கார் பரிசாக கிடைக்கும்.
பண்டிகை காலத்தை கொண்டாடும் வகையில் துபாய் கோல்ட் சூக் பகுதியில் உள்ள கடைகளில் ‘Shop & Win’ என்ற விற்பனை பிப்ரவரி 8 வரை நடைபெறுகிறது.
இதில் AED 500 அல்லது அதற்கு மேல் தங்க நகை, கைக்கடிகாரங்கள் வாங்குபவர்களுக்கு ராஃபிள் ட்ரா டிக்கெட் வழங்கப்படும். அதன் மூலம் ட்ராவில் பங்கேற்று வெற்றிபெறும் அதிர்ஷ்டசாலிக்கு Gold Mercedes-Benz S-Class 500 கார் பரிசாக வழங்கப்படும்.
புர்ஜ் கலீபாவை பார்வையிட தமிழ் மாணவனுக்கு சிறப்பு அனுமதி
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற பள்ளி விழாவில், புர்ஜ் கலீபாவைப் போல வேடம் அணிந்து அனைவரையும் கவர்ந்த தமிழ் மாணவன் நிஹித்திற்கும், அவரது பெற்றோருக்கும், புர்ஜ் கலீபாவை இலவசமாக பார்வையிட அனுமதி வழங்கப்பட்டது.
54வது அமீரக தேசிய தினத்தையொட்டி துபாயில் டிச. 2 அன்று மாணவர்களுக்கான போட்டி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அஜ்மானில் உள்ள குளோபல் இந்தியன் பள்ளியில் பயிலும் நிஹித் என்ற தமிழ் மாணவன் புர்ஜ் கலீபா போன்று வேடம் அணிந்து உரையாற்றியது பார்வையாளர்களை கவர்ந்தது.
இதை பார்த்து மாணவனை பாராட்டிய At The Top Burj Khalifa-வின் மேலாளர் மாணவன் நிஹித்திற்கும், அவரது பெற்றோருக்கும், புர்ஜ் கலீபாவை பார்வையிட இலவச அனுமதி வழங்கினார். இந்த வாய்ப்பை வழங்கிய அனைவருக்கும் நிஹித்தின் பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
360°-யில் புத்தாண்டு கொண்டாட்டம்!
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டிச. 31 அன்று DJ இசை நிகழ்ச்சியுடன் 360° கோணத்தில் வாணவேடிக்கை மற்றும் லேசர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
புத்தாண்டை முன்னிட்டு துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் டிச. 31 அன்று DJ இசை நிகழ்ச்சியுடன் 360° கோணத்தில் வாணவேடிக்கை மற்றும் லேசர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விலை AED 30 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
முன்பதிவு & முழு விவரம்: https://dubai.platinumlist.net/event-tickets/103887/ring-of-fire-nye-at-dubai-international-stadium
