துபாயில் அரசு வேலை என்பது பலரது கனவு. 2026-ம் ஆண்டில் இந்தக் கனவு நனவாகப் போகிறது. துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரக அரசு, தொழில்நுட்பம், மருத்துவம், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளை விரிவுபடுத்தி வருவதால், வெளிநாட்டினருக்கான உயர்பதவிகள் அதிகளவில் உருவாக்கப்பட்டுள்ளன.
அமீரக அரசு தனது சேவைகளை மேம்படுத்த புதிய துறைகளை உருவாக்கி வருகிறது. இதற்காக சுமார் AED 1.315 பில்லியன் பட்ஜெட் ஒதுக்கப்பட்டு, 7,000-க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் அறிவிக்கப்பட உள்ளன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் வளர்ச்சியால் திறமையான நிபுணர்களுக்குப் பெரும் தேவை ஏற்பட்டுள்ளது.
டாப் 10 அரசுப் பணிகள்:
துபாய் அரசின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்புத் தளமான dubaicareers.ae-ல் பட்டியலிடப்பட்டுள்ள சில முக்கியப் பணிகள் இதோ:
வீட்டுவசதி மேற்பார்வையாளர் (Housing Supervisor):
நிறுவனம்: பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான துபாய் அறக்கட்டளை.
வேலை: பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான இடம் கொடுத்து, அவர்களின் மருத்துவம் மற்றும் அடிப்படைத் தேவைகளை அன்புடன் கவனித்துக் கொள்வதாகும்.
தகுதி: மேல்நிலை வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். விருந்தோம்பல் அல்லது மருத்துவத்தில் பணி அனுபவம் தேவை
சம்பளம்: மாதம் AED 10,000-க்கும் குறைவு.
டிஜிட்டல் சர்வீஸ் ஸ்பெஷலிஸ்ட் (Digital Services Development)
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA)
பணி: ஆன்லைன் சேவைகளை மேம்படுத்துதல், தொழில்நுட்ப திட்டங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் செயல்திறனைக் கண்காணித்தல்.
தகுதி: IT அல்லது கணினி அறிவியலில் இளங்கலை பட்டம், 5 வருட அனுபவம்.
சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
பொறியாளர் – பேருந்து பணிமனை (Engineer – Bus Depots)
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA).
பணி: பேருந்து பணிமனை பராமரிப்பு, எரிபொருள் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு அம்சங்களை மேற்பார்வையிடுதல்.
தகுதி: மெக்கானிக்கல் அல்லது இண்டஸ்ட்ரியல் இன்ஜினியரிங் பட்டம்.
சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
சீனியர் சைட் இன்ஜினியர் (Senior Site Engineer)
நிறுவனம்: மாடா மீடியா (Mada Media)
பணி: விளம்பர பலகைகள் அமைக்கும் பணிகளை மேற்பார்வையிடுதல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களைச் சரிபார்த்தல்.
தகுதி: சிவில் இன்ஜினியரிங் இளங்கலை பட்டம், 5-7 வருட அனுபவம்.
சம்பளம்: AED 30,001 முதல் AED 40,000 வரை.
ஏவி எடிட்டர் (AV Editor)
நிறுவனம்: துபாய் அரசு மீடியா அலுவலகம்.
பணி: சமூக வலைதளங்கள் மற்றும் செய்திகளுக்காக வீடியோ மற்றும் புகைப்படங்களை எடிட் செய்தல்.
தகுதி: மீடியா அல்லது வீடியோ புரொடக்ஷன் பட்டம், 3 வருட அனுபவம் (Adobe/Final Cut தெரிந்திருக்க வேண்டும்).
சம்பளம்: AED 10,001 முதல் AED 20,000 வரை.
அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் (EMT)
நிறுவனம்: துபாய் ஆம்புலன்ஸ் (DCAS).
பணி: ஆம்புலன்ஸில் முதலுதவி சிகிச்சை அளித்தல் மற்றும் நோயாளிகளைப் பராமரித்தல்.
தகுதி: நர்சிங் அல்லது EMS டிப்ளோமா, DCAS உரிமம், 2-3 வருட அனுபவம்.
சம்பளம்: AED 10,001 முதல் AED 20,000 வரை.
சீனியர் இன்ஜினியர் – பேருந்து பணிமனை (Senior Engineer – Bus Depots)
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA).
பணி: பேருந்து பணிமனை செயல்பாடுகளை வழிநடத்துதல், அவசர கால மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை உறுதி செய்தல்.
தகுதி: இன்ஜினியரிங் பட்டம், 2-5 வருட அனுபவம்.
சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
தலைமை நிபுணர் (HR Business Affairs)
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA).
பணி: மனிதவள மேம்பாட்டுத் திட்டங்கள், ஒப்பந்தங்கள் மற்றும் பணியாளர்களின் செயல்பாடுகளை நிர்வகித்தல்.
தகுதி: பிசினஸ் அல்லது HR பட்டம், 11 வருட அனுபவம்.
சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
சிஸ்டம் டெவலப்மெண்ட் ஸ்பெஷலிஸ்ட் (Hyperion/EPM)
நிறுவனம்: துபாய் நிதித் துறை (Department of Finance).
பணி: மத்திய நிதி அமைப்புகளை (Financial Systems) மேம்படுத்துதல் மற்றும் மென்பொருள் செயல்திறனைக் கண்காணித்தல்.
தகுதி: IT பட்டம், 8 வருட அனுபவம்.
சம்பளம்: AED 20,001 – AED 30,000 வரை.
இன்னோவேஷன் எக்ஸ்பர்ட் (Expert – Innovation)
நிறுவனம்: சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA).
பணி: புதிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புத் திட்டங்களை நிர்வகித்தல், கூட்டாண்மை ஒப்பந்தங்களை உருவாக்குதல்.
தகுதி: பிசினஸ் அல்லது மேலாண்மை பட்டம், 14 வருட அனுபவம்.
சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.
அமீரகத்தில் வேலை தேடுபவர்களுக்கு சில இணையதளங்கள் பிரதானமாக உள்ளன. இதன் மூலம் நேரில் அலுவலகங்களுக்குச் செல்லாமல், போலி விளம்பரங்கள் மற்றும் போலி ஏஜென்சிகளை நம்பாமல் ஒரே கிளிக்கில் நூற்றுக்கணக்கான வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம். அமீரகத்தில் வேலை வாய்ப்புகளை வழங்கும் நம்பகமான இணையதளங்கள் குறித்த ஏற்கனவே வெளியிடப்பட்டது.
