பார்க்கிங்கிற்கு புதிய கட்டண நடைமுறை!
துபாய் விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணத்தை சாலிக் இ-வாலட் வழியாக செலுத்தும் புதிய நடைமுறை ஜன. 22 முதல் அமலுக்கு வருகிறது.
துபாய் விமான நிலையத்தின் பார்க்கிங் கட்டணத்தை சாலிக் இ-வாலட் வழியாக செலுத்த துபாய் விமான நிலையங்கள் மற்றும் சாலிக் இடையே 10 ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் துபாய் விமான நிலையத்தின் பார்க்கிங் கட்டணத்தை சாலிக் இ-வாலட் வழியாக செலுத்த முடியும்.
இந்த புதிய நடைமுறை ஜன. 22 முதல் அமலுக்கு வருகிறது. விமான நிலையத்திலிருந்து வெளியேறும்போது, உங்கள் வாகனத்தில் உள்ள Salik E-Wallet கணக்கிலிருந்து கட்டணம் தானாகவே எடுத்துக் கொள்ளப்படும்.
இதன் மூலம் காகித டிக்கெட்டுகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. டெர்மினல் 1, 2, 3 மற்றும் கார்கோ மெகா டெர்மினல் என அனைத்து இடங்களிலும் உள்ள 7,400 பார்க்கிங் இடங்களுக்கும் இது பொருந்தும்.
ரேஸர் அஜித் குமார் பங்கேற்கும் கார் பந்தயம் துபாயில்!
மிச்செலின் 24H துபாய் கார் பந்தயம் துபாய் ஆட்டோட்ரோமில் ஜனவரி 16, 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடைபெற்று வருகிறது. மிச்செலின் 24H துபாய் என்பது 24 மணி நேரம் இடைவிடாது நடைபெறும் கார் பந்தயமாகும்.
தங்கள் அணியின் காரை பல ஓட்டுநர்கள் பகிர்ந்துகொண்டு ஓட்டுவார்கள். 24 மணி நேரத்தில் அதிக சுற்றுகளை முடிக்கும் அணி வெற்றி பெறும்.
இந்த கார் பந்தயத்தில், GT3, GT3-PRO/AM, GT3-AM, GTX, 992, 992-AM, GT4, TCE-TCX, TCE-TC ஆகிய கார் வகைகள் இடம் பெறுகின்றன. பந்தய டிக்கெட்டுகளை Platinumlist.net என்ற இணையதளத்தில் பெறலாம். 24 மணி நேரம் இடைவிடாது நடைபெறும் இந்த பந்தயத்தில் அதிக சுற்றுகளை முடிக்கும் அணி வெற்றி பெறும்.
இந்த பந்தயத்தில் ரேஸர் அஜித் குமார் பங்கேற்கிறார்.
20 ஆண்டுகால சாதனைகளை விளக்கும் பரிசு!
துபாய் ஆட்சியாளரின் 20 ஆண்டுகால தலைமைத்துவம் மற்றும் அவர் மேற்கொண்ட சாதனைகளை விளக்கும் புகைப்பட ஆல்பத்தை அமீரக அதிபர், துபாய் ஆட்சியாளருக்கு பரிசளித்தார்.
அபுதாபியில் உள்ள காசர் அல் பஹரில் துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், அமீரக அதிபர் மாண்புமிகு ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களை சந்தித்தார்.
இச்சந்திப்பின் போது துபாய் ஆட்சியாளரின் 20 ஆண்டுகால தலைமைத்துவம் மற்றும் சாதனைகளை விளக்கும் புகைப்பட ஆல்பத்தை தனது கையெழுத்துடன் அமீரக அதிபர், துபாய் ஆட்சியாளருக்கு பரிசளித்தார்.
பயங்கரவாதிகளாக அறிவித்தற்கு அமீரகம் வரவேற்பு!
எகிப்து, லெபனான் மற்றும் ஜோர்டானில் வன்முறையில் ஈடுபடும் சில இஸ்லாமிய அமைப்புகளை, பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு அமீரகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.
வன்முறை செயல்களில் ஈடுபட்டு வரும் எகிப்து, லெபனான் மற்றும் ஜோர்டானில் சில இஸ்லாமிய அமைப்புகளை பயங்கரவாத அமைப்புகளாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதற்கு அமீரக வெளியுறவு அமைச்சகம் ஆதரவு தெரிவித்துள்ளது.
அதிகாரியின் நெகிழ்ச்சி செயல்!
துபாயிலிருந்து சென்னைக்கு செல்லவிருந்த தமிழகத்தை சேர்ந்த முஸ்தாக் நூர் என்பவரின் தங்க மோதிரம் விமான நிலையத்தில் தொலைந்த நிலையில், டூட்டி ப்ரீ (Duty Free) அதிகாரி ஒருவர் அதை கண்டெடுத்து 25 நிமிடங்களுக்குள் உரியவரிடம் ஒப்படைத்தார்.
தமிழகத்தை சேர்ந்த முஸ்தாக் நூர் என்பவர் சென்னைக்கு செல்ல துபாய் விமான நிலையத்திற்கு வந்த நிலையில், டியூட்டி ஃப்ரீ பகுதியில் தனது தங்க மோதிரத்தை தொலைத்துள்ளார். அங்கிருந்த அதிகாரிகளிடம் அவர் உதவி கேட்டதை தொடர்ந்து 25 நிமிடங்களுக்குள் டியூட்டி ஃப்ரீ அதிகாரியான ஜாவேத் என்பவர் மோதிரத்தை கண்டெடுத்து முஸ்தாக்கிடம் ஒப்படைத்தார்.
