துபாய் மக்கள் தொகையில் ஆதிக்கம் செலுத்தும் இளைஞர்கள்! 

துபாயின் மொத்த மக்கள் தொகையில் 35 வயதிற்குட்பட்ட குடியிருப்பாளர்கள் 60.4 சதவீதம் இருப்பதாக அமீரக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

அமீரக மக்கள் தொகையில் 70 சதவீதத்திற்கும் மேல் வெளிநாட்டினர் வசிக்கின்றனர். இவர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அந்த வகையில் துபாயின் மக்கள் தொகையில் பெரும்பான்மையோர் 35 வயதுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் ஆவர். 

மக்கள் தொகையில் இளைஞர்கள் பெரும்பான்மை 

துபாயில் 35 வயதிற்குட்பட்ட குடியிருப்பாளர்கள் 60.4 சதவீதம் இருப்பதாக அமீரக சுகாதார அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது. இது பத்தில் ஆறு பேர் என்ற விகிதத்தை குறிக்கிறது. இவர்களில் 66.4% பேர் ஆண்களாகவும், 33.6% பேர் பெண்களாகவும் உள்ளனர். இதில் 30 முதல் 34 வயதுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் 18 சதவீதமும், 25 முதல் 29 வயதுடையவர்கள் 16.5 சதவீதமும் உள்ளனர்.

இந்த வளர்ச்சி உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக துபாயின் நிலையை மேலும் உறுதிப்படுத்துகிறது. 30 முதல் 34 வயதுக்குட்பட்ட நபர்கள் சுமார் 695,000 பேர் உள்ளனர். இவர்கள் தொழில்துறையில் மிகுந்த அனுபவம் உள்ளவர்களாகவும், முக்கிய துறைகளின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பவர்களாகவும் உள்ளனர். 

25 முதல் 29 வயதுடையவர்கள் சுமார் 643,000 பேர் உள்ளனர். இவர்கள் மிகவும் தகவமைப்பு மற்றும் தொழில்நுட்ப ரீதியாக வலுவானவர்களாக உள்ளனர். குறிப்பாக டிஜிட்டல் துறைகளில் முக்கிய பங்கு வகிப்பவர்களாக இருக்கிறார்கள். 

நாட்டின் முதுகெலும்பாக இளைஞர்கள்

துபாய் மட்டுமின்றி அமீரகம் முழுவதுமே இளைஞர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. கிட்டத்தட்ட 2.33 மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் 35 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். நாட்டின் மக்கள் தொகையில் 35 முதல் 59 வயதுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் 1.44 மில்லியன் மக்கள் உள்ளனர்.

இது தோராயமாக 1.44 மில்லியன் எண்ணிக்கையாகும். இதற்கு நேர்மாறாக, 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் மக்கள் தொகையில் வெறும் 2.5 சதவீதம் மட்டுமே உள்ளனர். இது கிட்டத்தட்ட 92,000 நபர்கள் ஆவர். 60 முதல் 74 வயதுக்குட்பட்டவர்கள் கிட்டத்தட்ட 80,000 பேரும்,  75 வயதுக்கு மேற்பட்டவர்கள் 12,000 பேருக்கு சற்று அதிகமானோர் உள்ளனர். 

TAGGED: