துபாய் தேராவில் கலகலப்பாக நடைபெற்ற டாக்டர் பால் மாணிக்கத்தின் Fans Meet!

குடலியல் மருத்துவ நிபுணர் மற்றும் யூடியூப் இன்ஃப்ளூயன்சரான டாக்டர் பால் மாணிக்கம், தன்னுடைய காணொளிகள் மூலம் ஊட்டச்சத்து, செரிமானம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அறிவுரைகளையும் தன்னுடைய கருத்துகளையும், நகைச்சுவை பாணியில் மக்களுக்கு தெரிவிக்கும் மருத்தவத்துறையின் முன்னணி இன்ஃப்ளூயன்சர் ஆவார்.

கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி வெள்ளிகிழமை, துபாய் தேரா சிட்டி சென்டரில் உள்ள கார்டன் சிட்டி ஹோட்டலில் இரவு 07:30 மணிக்கு துவங்கிய Dr pal’s meet and greet நிகழ்வை, அவரது ரசிகர்களுக்காக K-Family, DBQ Pro, Pixel World மற்றும் TEPA இணைந்து நடத்திய இந்த Fans Meet  நிகழ்வை, பல்வேறு ரசிகர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். 

K-Family கலைவாணி சங்கர், சேகு தமீம், ரிச்சர்ட் மற்றும் DBQ Pro மகேஷ் ஆகியோர் ஒருங்கிணைத்த இந்நிகழ்வில், TEPA சார்பாக டாக்டர் பால் பராபக்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். சுமார் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரசிகர்களின் அனைத்து கேள்விகளுக்கும் டாக்டர் பால் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில் பதில்களை வழங்கி, வந்திருந்த அனைத்து ரசிகர்களுடனும் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.