போரினால் பாதிகப்பட்டுள்ள லெபனான் மக்களுக்கு உதவ முன்வந்த அமீரகம், குழந்தைகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி நிவாரணப் பொருட்களை பேக்கிங் செய்த நெகிழ்ச்சி சம்பவம் சார்ஜாவில் அரங்கேறியுள்ளது.
UAE Stands with Lebanon எனும் இந்த நிகழ்ச்சி, சார்ஜாவின் The Big Heart பவுண்டேஷன் (TBHF) மற்றும் அமீரக வெளியுறவுத்துறை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. இதில் குழந்தைகள், நிவாரணப் பொருட்களை ஒன்று திரட்டி கட்டும் போது சமையல் எண்ணெய், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் போன்றவற்றை பெட்டிகளில் உற்சாகமாக கொண்டு சேர்த்தனர் அதனுடன் சேர்த்து தங்களின் அன்புக் கடிதங்களையும் லெபனான் மக்களுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் பல தன்னார்வத் தொண்டர்கள் இந்த அரங்கிற்கு வெளியே ஒரு பகுதியில் தங்கள் முறைக்காக பொறுமையாகக் காத்திருந்த சம்பவமும் அங்கு நடைபெற்றது.
இந்நிகழ்வின் நோக்கம் மனிதாபிமான அடிப்படையில் போரில் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு உதவ வேண்டும் என்பதே ஆகும், காலை 08 மணியளவில் துவங்கிய இந்த நிகழ்வு மதியம் 03 மணி வரை நீடித்தது. கடந்த வாரம், துபாய் கண்காட்சி மையத்தில் (எக்ஸ்போ சிட்டி) நடத்தப்பட்ட இதே மாதிரியான நிகழ்வில் 4,000-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பிடத்தக்க சில சம்பவங்கள்
இங்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களுள் குடும்பத்துடன் வந்த இரு சகோதரிகள், லெபனானுக்கு ஆதரவு தெரிவிக்கும் UAE தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உதவி தொகுப்புகளை தயாரித்தனர்.
இவர்களுள் மாரம் என்பவரின் 6 வயது மகன் அப்துல் ரஹ்மான், அங்கு நின்று கொண்டிருந்த தொண்டர்களிடம் தன்னை விட பெரிய பெட்டிகளை எடுத்துச் சென்று கொடுத்து நெகிழ்வை ஏற்படுத்தினான்.
அஜ்மான் பல்கலைக்கழகத்தில் டிசைநிங் பயின்று வரும் ராவன் என்பவர், அவரது குடும்பத்துடன் காலை 07 மணிக்கே வந்ததாக தெரிவித்தார். அங்கு பிற தன்னார்வத் தொண்டர்கள் வருவதற்கு முன்பே ஏற்பாடுகள் செய்து வைக்க நாங்கள் அவ்வாறு செய்தோம் என்று அவர் கூறினார்.
லெபனானில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகிறது, இந்த போரில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்டீபன் ஆண்டர்சன் கூறுகிறார். அமீரகத்தில் இருக்கும் உலக உணவு திட்டம் (WFP) அலுவலகத்தின் மூலம் அங்கு உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கி உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட லெபனானுக்கு 100 மில்லியன் அமெரிக்க இங்கு வந்த ஆயிரக்கணக்கான மக்களுள் குடும்பத்துடன் வந்த இரு சகோதரிகள், லெபனானுக்கு ஆதரவு தெரிவிக்கும் UAE தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக உதவி தொகுப்புகளை தயாரித்தனர்.
இவர்களுள் மாரம் என்பவரின் 6 வயது மகன் அப்துல் ரஹ்மான், அங்கு நின்று கொண்டிருந்த தொண்டர்களிடம் தன்னை விட பெரிய பெட்டிகளை எடுத்துச் சென்று கொடுத்து நெகிழ்வை ஏற்படுத்தினான்.
அஜ்மான் பல்கலைக்கழகத்தில் டிசைநிங் பயின்று வரும் ராவன் என்பவர், அவரது குடும்பத்துடன் காலை 07 மணிக்கே வந்ததாக தெரிவித்தார். அங்கு பிற தன்னார்வத் தொண்டர்கள் வருவதற்கு முன்பே ஏற்பாடுகள் செய்து வைக்க நாங்கள் அவ்வாறு செய்தோம் என்று அவர் கூறினார்.
லெபனானில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் நடைபெற்று வருகிறது, இந்த போரில் 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஸ்டீபன் ஆண்டர்சன் கூறுகிறார். அமீரகத்தில் இருக்கும் உலக உணவு திட்டம் (WFP) அலுவலகத்தின் மூலம் அங்கு உள்ள அனைத்து மக்களுக்கும் உணவு வழங்கி உதவ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பாதிக்கப்பட்ட லெபனானுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், சிரியாவிற்கு 30 மில்லியன் டாலர்களையும் ஒதுக்கப்படுகிறது.