சார்ஜாவில் செய்யப்பட்ட பார்க்கிங் மாறுதல்கள்; விடுமுறை நாட்களுக்கும் பார்க்கிங் கட்டணம், முழு விவரம்

நவம்பர் 01 முதல், பார்க்கிங் நேரத்தில் புதிய மாறுதல்களை அமல்படுத்துகிறது சார்ஜா நகராட்சி, இது பார்க்கிங் இடத்தை மேம்படுத்தவும், செயல்திறனை அதிகரிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் நேரத்தில் மாற்றம்

நவம்பர் 01 முதல், நீல நிற பார்க்கிங் மையங்களில் காலை 08 மணியில் இருந்து நள்ளிரவு 12 மணி வரை கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது, வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீல நிற பார்க்கிங் நிறுத்தங்களில் பார்க்கிங் கட்டணம்

1 மணி நேரத்திற்கு AED 2
2 மணி நேரத்திற்கு AED 5
3 மணி நேரத்திற்கு AED 8
5 மணி நேரத்திற்கு AED 12

SMS சேவை மூலம் பார்க்கிங் கட்டணங்களை செலுத்திக் கொள்ள முடியும்.

தொடர் வாடிக்கையாளர்களுக்கு சந்தா முறை

  • முழு நகர சந்தா (City-wide Subscription): இதனை பெறுவதன் மூலம் நகரத்தின் எந்த மூலையிலும் பார்க்கிங்கை பயன்படுத்திக் கொள்ள முடியும்.
  • இரு இட பார்க்கிங் சந்தா (Two-Area Subscription): தேர்ந்தெடுக்கப்பட்ட இரு இடங்களில் வாகனத்தை நிறுத்திக் கொள்ள முடியும்.

இந்த இரு சந்தாவை பெறுவதன் மூலம் பார்க்கிங்கிற்கு தினமும் கட்டணம் செலுத்துவதை பொதுமக்கள் தவிர்க்க முடியும்.

நகரம் முழுவதும் சந்தா கட்டணம்:

  • 10 நாட்களுக்கு – AED 170
  • 20 நாட்களுக்கு – AED 290
  • 30 நாட்களுக்கு – AED 390
  • 3 மாதங்களுக்கு  – AED 1,050
  • 6 மாதங்களுக்கு – AED 1,750
  • 1 வருடத்திற்கு – AED 2,850

இரு இட பார்க்கிங் சந்தா கட்டணம்:

  • 3 மாதங்களுக்கு – AED 600
  • 6 மாதங்களுக்கு – AED 1,100
  • 1 வருடத்திற்கு – AED 2,100