முதல் முறையாக அபுதாபி BAPS இந்து மந்திர் ஆலயத்தில்; தீபாவளி கொண்டாட்டங்கள்!

அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர் முதல் முறையாக தீபாவளி திருநாள் சிறப்பு பூஜைகளையும், அவர்களுக்கான புத்தாண்டு விழாவையும் கொண்டாட திட்டமிட்டுள்ளது.

இந்த பிரமாண்ட ஆலையம் திறக்கப்பட்டதில் இருந்து இதுவரை 1.5 மில்லியன் பக்தர்கள் கையால் செதுக்கப்பட்ட இதன் கலை நயத்தையும், பக்தியின் சாராம்சத்தையும், இயற்கைக்கு உகந்த இதன் சூழலையும் பார்வையிட்டுள்ளனர். 

என்னென்ன நிகழ்வுகள்?

அக்டோபர் 29: தந்தேராஸ் சிறப்பு பூஜைகள் BAPS அமைப்பு மூலம் இணையத்தில் நடத்தப்பட்டது.

அக்டோபர் 31: தீபாவளி சிறப்பு பூஜைகள், ஆலையத்தில் நடைபெறவுள்ளது. (காலை 9 மணி முதல் இரவு 9 மணி)

நவம்பர் 01 & 02: கோவர்தன பூஜை மற்றும் அவர்களுக்கான புத்தாண்டு விழாவிற்கு, நூற்றுக்கும் மேற்பட்ட சைவ உணவுகள் கொண்டு தாமரை, மயில், கைலாய மலை உள்ளிட்ட கலைச் சித்திரங்கள் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படவுள்ளது. (காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை)

முன்பதிவு செய்வது எப்படி?

மேற்கண்ட இந்த நிகழ்வுகளுக்கு கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், வருகைதாரர்கள் முன்னதாகவே [mandir.ae] தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆலய நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பார்க்கிங்?

வாகன நிறுத்தம் Al Shahama F1 இல் இருக்கும், அங்கிருந்து பயணிகள் கோயிலுக்கு சிறிய பேருந்துகளில் அழைத்துச் செல்லப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

தடை செய்யப்பட்ட பொருட்கள்

பாட்டில், பேனா, லக்கேஜ், பேட்டரி, சார்ஜர் உள்ளிட்ட பொருட்கள் தடை செய்யப்படுவாதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது. பக்தர்கள் பைகள் , உலோக பொருட்கள்  மற்றும் மதிப்புமிக்க பொருட்கள்  கொண்டுவருவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சார்ட்ஸ், பனியன் உள்ளிட்ட ஆடைகளை தவிர்த்து முழு உடை அணியவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.