மத்திய கிழக்கில் முதன் முறையாக மக்கள் தேவைக்கு மின்சாரம் வழங்கும் மசூதி, துபாயில் திறக்கப்பட்டது:

துபாயில் மத்திய கிழக்கின் முதல் பசுமை (net-positive) மசூதி திறக்கப்பட்டுள்ளது. இது தனக்கு தேவையான அளவை விட அதிக அளவிலான மின்சாரத்தை உற்பத்தி செய்து பொது சேவைக்கு வழங்கவுள்ளது.  இந்த மசூதியை மஜித் அல் புட்தைம் எனும் ப்ராபர்ட்டி டெவலப் நிறுவனம் மற்றும் துபாய் இஸ்லாமிய விவகார & தொண்டு செயல்பாட்டு துறை இணைந்து திலால் அல் ஃகாஃப் பகுதியில் நிறுவியுள்ளன. இந்த நிறுவனத்தின் நிறுவனர் மஜித் அல் புட்தைமின் பெயரே மசூதிக்கும் சூட்டப்பட்டுள்ளது.

அமீரகத்தின் கிரீன் அஜெண்டா 2030 திட்டத்துக்கு ஆதரவாக நிறுவப்பட்டுள்ளது.

மசூதியின் முக்கிய அம்சங்கள்:

மின்சக்தி: மசூதியின் கூரை மீது 203 சோலார் பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன, இவை மசூதிக்கு தேவையான மின்சக்தியின் அளவை விட  115% அதிகமாக ஆற்றலை உருவாக்குகின்றன. இந்த கூடுதல் ஆற்றல் சுற்றியுள்ள சமூகத்தின் பயன்பாட்டிற்கு உள்ளூர் மின்சாரக் தேவைக்கு திருப்பப்படுகிறது.

சிறப்புகள் : மசூதியில் சோலார் மின் ஆற்றலால் இயங்கும் வாட்டர் ஹீட்டர், LED விளக்குகள், நவீன ஏர் கண்டிஷனிங் இயந்திரங்கள் மற்றும் எலெக்ட்ரிக் வாகனம் சார்ஜ் செய்யும் நிலையங்கள் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளது. சிறப்பு கட்டிட மேலாண்மை அமைப்பு (BMS) ஆற்றல் வீணாவதை குறைக்க உதவுகிறது.

நிலைத்தன்மை உறுதி: மசூதி மாசடைவதை குறைக்கவும், நச்சில்லாத பொருட்களைப் பயன்படுத்தவும், காற்று மற்றும் நீர் தரத்தை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது நிலைத்தன்மையைக் குறிக்கும், உயர்ந்த தரச் சான்றிதழான BREEAM சான்றிதழைப் பெற முயற்சிக்கிறது.

இந்த திட்டத்தில் ஈடுபட்ட தலைவர்கள், சுற்றுச்சூழல் மதிப்புகளையும் பூமியை பாதுகாப்பதற்கான இஸ்லாமியக் கொள்கைகளையும் மதிக்கும் ஒரு நிலைத்தன்மைமிக்க கட்டடத்தினை இது பிரதிபலிக்கிறது என்று கருதுகிறார்கள். இந்த மசூதி மத்திய கிழக்கில் எதிர்கால திட்டங்களுக்கு ஒரு புதிய தரத்தை அமைக்குமென்று நம்பப்படுகிறது.