THE GAME LLC எனும் லாட்டரி நிறுவனத்திற்கு நாட்டின் முதல் அங்கீகரிக்கப்பட்ட லாட்டரி நிகழ்ச்சி நடத்த பொது வணிக விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையம் (GCGRA) ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி வருகிற டிசம்பர் 14 நிகழவுள்ள லாட்டரி லக்கி டிராவிற்காக டிக்கெட் தற்போது இணையத்தில் விற்பனையாகி வருகிறது.
இதில் ஒவ்வொரு போட்டியாளரும் கிராண்ட் பரிசு வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், லக்கி சான்ஸ் டிராக்களில் வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
எப்படி விளையாடுவது?
- theuaelottery.ae எனும் இணையத்துக்குள் நுழைந்த பின்,
- மொத்தம் ஏழு எண்களை தேர்வு செய்ய வேண்டும்
முதல் ஆறு எண்கள் (1 முதல் 31 வரை) நாட்களை குறிக்கும் வகையிலும், கடைசி ஒரு எண் ( 1 முதல் 12 வரை) மாதத்தை குறிக்கும் வகையிலும் தேர்வு செய்தல் வேண்டும். - லக்கி டேவிற்கான டிக்கெட்டை வாங்க வேண்டும்.
- உங்கள் டிக்கெட் லக்கி டிராவிற்கு சென்றவுடன் உங்களுக்கு AED 100 மில்லியன் வெல்லும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
டிக்கெட் விலை நிலவரம்:
ஒரு டிக்கெட்டுக்கு AED 50 (VAT உட்பட). ஒரு பரிவர்த்தனையில் AED 25,000 வரையிலான டிக்கெட்டுகளை பொதுமக்கள் வாங்கலாம். டிரா நடைபெறும் நாளில், இரவு 07 மணி முதல் 10 மணி வரை டிக்கெட்டுகளை பெற முடியாது எனவும் பங்கேற்பாளர்கள் மற்ற நாட்களில் டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பரிசுகள் என்ன?

மேற்கண்ட படத்தில் காணும் பரிசுகள் பிரித்து வழங்கப்படுகிறது, இந்த லாட்டரி டிராவில் 100 மில்லியன் வெல்லும் வாய்ப்பு, மேலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏழு நபர்களுக்கு AED 100,000 வீதம் ஒவ்வொருவரும் வெல்லும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, ஸ்க்ராட்ச் கார்டுகள் மூலம் AED 50,000, AED 100,000, AED 300,000, மற்றும் AED 1,000,000 போன்று வெல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
லக்கி டிரா எப்போது?
லக்கி டிரா ஒன்று விட்டு ஒரு சனிக்கிழமை, இரவும் 08:30 மணிக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
