பெண் மீது தாக்குதல், AED 15,000 அபராதம்! – அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பு

அபுதாபியில் வீட்டிற்குள் நுழைந்து பெண்ணை தாக்கிய நபருக்கு AED 15,000 அபராதம் விதித்துள்ளது அபுதாபி நீதிமன்றம்.

பெண் மீது தாக்குதல் 

அபுதாபி சிவில் குடும்ப நீதிமன்றம், ஒரு பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வீட்டை சேதப்படுத்தி அந்த பெண்ணை தாக்கிய நபருக்கு AED 15,000 வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்றம் தீர்ப்பு

இதையடுத்து நீதிபதிகள் இதற்கு முந்தைய வழக்குகளில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அடிப்படையாக கொண்டு அந்த பெண் மீது ஏற்பட்ட தாக்குதலை உறுதி செய்த பின், அந்த நபருக்கு AED 15,000 அபராதம் விதித்தனர். இருப்பினும் மிரட்டல் மற்றும் தகாத வார்த்தைகளால் திட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்,

இந்த தாக்குதல் அவரது உடல் நலம் மட்டுமல்லாமல் அவரது மன நல்வாழ்வையும் பாதித்தாக நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரக சிவில் சட்டத்தின் பிரிவு 282 இன் படி , மற்றவர்களுக்கு சேதம் உண்டாக்கினால், அதற்கு அவர்கள் தாம் பொறுப்பேற்க வேண்டும் என்ற சட்டத்தை மேற்கோளாக கொண்டு, அந்த நபர் தண்டனை பெற்றிருந்தாலும், அவர் ஏற்படுத்திய சேதங்களுக்கு அவர் தான் பொறுப்பு என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.