அபுதாபியில் கடும் பனிமூட்டம்; அமீரகத்தின் இன்றைய வானிலை அறிக்கை!

இன்று காலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனி மூட்டம் காணப்படும் என்பதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் வாகனங்கள் ஓட்ட  அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. 

வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை:

இன்று (அக்.8) காலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனி மூட்டம் காணப்படும் என தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் அபுதாபி காவல்துறை மற்றும் தேசிய வானிலை மையம் (NCM) இரண்டும் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இன்றைய வானிலை நிலவரம்: 

விபத்துகளைத் தவிர்க்க, வாகன ஓட்டிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வாகனம் ஓட்ட வேண்டும் என்றும், பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். நாட்டின் பெரும்பாலான இடங்களில் பகுதியளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மணிக்கு 10-20 கி.மீ வேகத்தில் இருந்து சில சமயங்களில் 30 கி.மீ வரை வேகமெடுக்கும் லேசானது முதல் மிதமான காற்று வீசக்கூடும். இந்தக் காற்றினால் தூசி மற்றும் மணல் பறக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பநிலை மற்றும் ஈரப்பதம்

வெப்பநிலை சற்றுக் குறைந்த வெப்பமாகவே இருக்கும். நாட்டின் அதிகபட்ச வெப்பநிலை 38°C முதல் 42°C வரை இருக்கும்.கடற்கரைப் பகுதிகளில் சராசரி வெப்பநிலை 35°C முதல் 39°C வரையிலும், மலைப் பகுதிகளில் 21°C முதல் 25°C வரையிலும் இருக்கும்.

உட்புறப் பகுதிகளில் ஈரப்பதம் 70% முதல் 90% வரையிலும், மலைப் பகுதிகளில் 55% முதல் 70% வரையிலும் இருக்கும். கடற்கரை மற்றும் உட்புறப் பகுதிகளில் இன்று இரவு நேரத்திலும், வியாழன் காலையிலும் ஈரப்பதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடல் நிலை: 

’அரேபிய வளைகுடாவில் கடல் லேசானது முதல் மிதமான அலைகளுடனும், ஓமன் கடலில் லேசான அலைகளுடனும் காணப்படும் என வானிலை  மையம் தெரிவித்துள்ளது. கடந்த செப்.30 அன்று நாடு முழுவதும் அதிகபட்ச வெப்பநிலை 38∘ முதல் 42∘ C வரை இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 20∘ முதல் 26∘ C வரை இருக்கும் என தேசிய வானிலை மையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGGED: