துபாயின் ப்ளூவாட்டர்ஸ் தீவில் அமைந்துள்ள-பிரபலமான ஜுமைரா கடற்கரை குடியிருப்புகள் (JBR) கடற்கரைக்கு வெளியே அமைந்துள்ள Ain துபாய், கடந்த அக்டோபர் 21, 2021 அன்று திறக்கப்பட்டது.
இது பராமரிப்பு பணிகளுக்காக மார்ச் 2022 இல் மூடப்பட்டதாக அறிவித்தது, தற்போது பல்வேறு தாமதங்களுக்கு பின், இன்று முதல் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 1,750 பேர் அமரக்கூடிய 48 அறைகளைக் கொண்டுள்ளது. தரையில் இருந்து Ain துபாய் 250 மீட்டர் உயரம் கொண்டது. இது லாஸ் வேகாஸில் உள்ள ஹை ரோலரை விட 82 மீட்டர் உயரம் ஆகும்.
இயங்கும் நேரம்?
செவ்வாய் – வெள்ளி: மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை
சனி – ஞாயிறு: காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படும் நாட்களில் நுழைவுக்கான இறுதி நேரம் இரவு 8.15 மணி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் கட்டணம்?
டிக்கெட் கட்டணம் நான்கு பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது
- Views: AED 145
- Views plus: AED 195
- Premium: AED 265
- VIP: AED 1,260
இதில் மிகவும் உயர்ந்த கட்டணத்தை கட்டி பெறுவோர் 360 டிகிரியிலும் நகரை பார்வையிடலாம். 12 வயதிற்கும் மேற்பட்டோருக்கு AED 145, 03 முதல் 12 வயது குழந்தைகளுக்கு AED 115, 03 வயதிற்கு உட்பட்ட மழலைகளுக்கு இலவசம்.
குடும்ப டிக்கெட் (Family Pass): இரண்டு அடல்ட்ஸ், இரண்டு குழந்தைகள் என நான்கு நபர்கள் அடங்குவர் – AED 415
Ain Dubai Views Plus திட்டத்தின் மூலம் தின்பண்டங்கள் மற்றும் பானங்கள், விரைவான வரிசை பாஸ் மற்றும் நிலையான டிக்கெட்டால் வழங்கப்படுவதைத் தவிர புகைப்படங்களையும் வழங்குகிறது. ஒவ்வொரு சவாரி சுமார் 38 நிமிடங்கள் நீடிக்கும் மற்றும் துபாயின் ஸ்கைலைனின் 360 டிகிரி காட்சியை வழங்குகிறது.
