செக்கின் பேக்கேஜ் வரம்பை 30 கிலோவாக அதிகரித்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம்:

இந்தியாவின் பட்ஜெட் கேரியர்களில் ஒன்றான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அமீரகம், வளைகுடா மற்றும் சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கு பயணிகளுக்கு இலவச ‘check-in-baggage’ அளவை 30 கிலோவாக உயர்த்தியுள்ளது.

கேபின் பேக்கேஜ் அளவு:

இதுபோக, ஏற்கனவே உள்ள கேபின் பேக்கேஜ் அளவு 7 கிலோ என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் பயணிகள் மடிக்கணினி பை, கைப்பை, முதுகுப்பை அல்லது முன் இருக்கைக்கு கீழே பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் சிறிய பையையும் தங்களுடன் கொண்டு செல்லலாம்.

முக்கியமாக, கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பங்களுக்கு 10 கிலோ செக்-இன் பேக்கேஜ் அலவன்ஸ் கூடுதலாக வழங்கப்படுகிறது.

கைக்குழந்தையுடன் சென்றால் கூடுதலாக 10 கிலோ:

கைக்குழந்தைகளுடன் பயணிக்கும் குடும்பத்தினருக்கு 10 கிலோ வரை செக்-இன் பேக்கேஜ் அளவை நீட்டித்து கூடுதலாக வழங்கப்படுகிறது.

மொத்தமாக 47 கிலோ வரை?

இதன்மூலம், ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் கைக்குழந்தையுடன் செல்லும் பயணிகளுக்கு மொத்தமாக 47 கிலோ வரை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

பேக்கேஜ் விருப்பங்கள்:

எக்ஸ்பிரஸ் லைட்: இது குறைந்த பேக்கேஜ்களுடன்பறக்க விரும்பும் பயணிகளுக்கானது. இங்கு 3 கிலோ கேபின் பேக்கேஜ் அளவுடன் குறைந்த கட்டணங்களை வழங்குகிறது.

எக்ஸ்பிரஸ் பிஸ் (Xpress Biz): நிறுவனத்தின் பிசினஸ் கிளாஸ் பதிப்பாகும், மேலும் இதன் சர்வதேச விமானங்களுக்கு 40 கிலோ பேக்கேஜ் அளவு வழங்கப்படுகிறது. 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சேவை:

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்தியாவிற்கும் வளைகுடாவிற்கும் இடையே, ஒவ்வொரு வாரமும் சுமார் 450 விமானங்களை இயக்குகிறது. இந்த விமான நிறுவனம் இந்தியாவின் 19 நகரங்களை வளைகுடாவில் உள்ள 13 நகரங்களுடன் இணைக்கிறது.
மேலும், தனது நெட்வொர்க்கை 50-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது, புதிய வழித்தடங்களில் தாய்லாந்தில் உள்ள பாங்காக் மற்றும் ஃபூகெட் போன்ற நகரங்கள் அடங்கும், மேலும் அவை அபுதாபி, தம்மாம், மஸ்கட் மற்றும் ராஸ் அல்-கைமா போன்ற வளைகுடா நகரங்களுக்கு விமானங்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளன.