அக்டோபர் 31 தீபாவளியன்று ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் கமலஹாசனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது. படம் வெளிவர இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு பல்வேறு புரமோஷன் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அக்டோபர் 25, இரவு 07:15 மணிக்கு துபாய் தேரா சிட்டி சென்டரில் உள்ள, VOX திரையரங்கில் Home Screen Entertainment நிறுவனம் நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்து, லெனின் கணேசன் என்பவர் ஸ்பான்சர் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் சிவகார்த்திகேயன் கலந்த்து கொண்டு ரசிகர்களுடன் துபாய்க்கு வருவது எனக்கு ஒரு கனவாக இருந்தது, இப்போது அது நிறைவடைந்துள்ளது என நெகிழ்ச்சி அடைந்தார்.
