துபாயில் உடனடி டெலிவரி சேவையை அறிமுகம் செய்தது Amazon நிறுவனம்

துபாயில் உடனடி டெலிவரி சேவையை அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு “Amazon Now” என்ற பெயரில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் விதமாகவும், வியாபார ரீதியாக மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சில வினாடிகளில் மளிகை உட்பட அனைத்து பொருட்களும் சென்றடையவுள்ளது. 

சேவை தற்போது கிடைக்கும் முக்கிய பகுதிகள்:

  • ஜுமேரா கடற்கரை குடியிருப்பு
  • துபாய் மெரினா
  • துபாய் சிலிக்கான் ஒயாசிஸ்
  • ஜுமேரா லேக்ஸ் டவர்ஸ்

பிரைம் வாடிக்கையாளர்களுக்கு?

இந்த சேவை அமேசான் பிரைம் உறுப்பினர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் 25 திர்ஹம் அல்லது அதற்கும் மேல் பொருட்களை ஆர்டர் செய்யும்போது இலவச டெலிவரியை பெற முடியும்.

என்னென்ன ஆர்டர் செய்யலாம்?

வாடிக்கையாளர்களுக்கு தேவையான மளிகை சாமான்கள், பொம்மைகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த சேவை தினமும் காலை 7 மணி முதல் நள்ளிரவு வரை செயல்படுகிறது.