பிரம்மாண்டமாக நடைபெற்ற அனோமி திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி!

அனோமி திரைப்படத்தின் பிரம்மாண்ட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி ஜன.31, 2026 அன்று இரவு 7 மணிக்கு துபாயில் அல் குசைஸ் லுலு ஹைப்பர் மார்க்கெட்டில் நடைபெற்றது. இதில் அனோமி பட நடிகர்கள் ரஹ்மான், ஷெபின் பென்சன்  மற்றும் பாவனா பங்கேற்றனர். கே.ஆர்.ஜி குழுமத்தலைவர்  திரு, கண்ணன் ரவி இந்நிகழ்ச்சியின் ஸ்பான்சராக இருந்தார்.

மலையாளம்  மற்றும் தமிழில் வெளியாக உள்ள  அனோமி திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  துபாயில்  உள்ள பராக் ரெஸ்டாரண்டில்  நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஹ்மான் மற்றும் பாவனா ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களிடம் கலந்துரையாடினர். மேலும் அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.

அப்போது தமிழ் Buzz துபாய் ஊடகத்தின் சார்பில் வி.ஜே. ஐஸ்வர்யா நடிகர் ரஹ்மானிடம், “புதுபுது அர்த்தங்கள் மாதிரியான ரொமாண்டிக் காமெடி திரைப்படங்களில் மீண்டும் எப்போது நடிக்கப்போறீர்கள் என்ற கேள்விக்கு, தானும் வெகு நாட்களாக ரொமாண்டிக் காமெடி திரைப்படங்களில் நடிக்க காத்திருப்பதாகவும், தன்னை ஒரு காவல் அதிகாரி போல் அனைவரும் பார்ப்பதாகவும் கூறினார். 

இந்த படத்தில் பாவனா மறு அறிமுகம் செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது குறித்த வி.ஜே. ஐஸ்வர்யாவின் கேள்விக்கு, நடிகை பாவனா, “பெரும்பாலான படங்களில் சுட்டித்தனமான, குறும்புத்தனமான பெண்ணாகவே நடித்திருந்தேன், இப்படத்தில் துணிச்சலான பெண்ணாக நடித்துள்ளேன். ஆகவே இதில் பாவனா, மறு அறிமுகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது” என்றார். 

TAGGED: