அபுதாபியில் உள்ள BAPS இந்து மந்திர் ஆலயம் முதலாம் ஆண்டு நிறைவு விழாவை வருகிற பிப்ரவரி 14 ஆம் தேதி அனுசரிக்கிறது. இதற்காக பல்வேறு பல்வேறு சமய நிகழ்வுகளும், கலை விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன
பிப்ரவரி 14, 2024 அன்று, BAPS இந்து மந்திர் ஆலயம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆன்மீக குருவான மஹந்த் சுவாமி மகராஜ் அவர்களும் இணைந்து திறந்து வைத்தனர். தற்போது முதலாம் ஆண்டு நிறைவை கொண்டாடும் விதமாக ‘பட்டோத்சவம்’ சிறப்பு மத சடங்கும், நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆலயத்தில் தீபாவளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் அரங்கேரியது குறிப்பிடத்தக்கது.
கோவிலின் செய்தி தொடர்பாளர் கூறுகையில்
அபுதாபியின் மையத்தில் உள்ள வரலாற்று மற்றும் ஆன்மீக அடையாளமான BAPS இந்து மந்திரின் முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கு எங்களுடன் சேர அனைவரையும் அழைக்கிறோம்.
‘பட்டோத்சவம்’ மற்றும் பிற நிகழ்வுகள்
அன்றைய தினம் காலை 5:30 பட்டோத்சவ’ சடங்குகளுடன் தொடங்கும், இது கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஏழு தெய்வங்களுக்கும் உரிய ஒரு சடங்காகும். இந்த சடங்கு கிட்டதட்ட இரண்டு மணி நேரம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறும். பக்திப் பாடல்கள் மற்றும் கீர்த்தனைகள், பாரம்பரிய நடனம் மற்றும் கதை சொல்லும் அமர்வுகள் மூலம், நிகழ்ச்சிகள் பார்வையாளர்களுக்கு கலாச்சார ரீதியாக வளமான அனுபவத்தை வழங்குகிறது.
