துபாயில் டொமஸ்டிக் பணியாளர்களுக்காக எளிமைப்படுத்தப்படும் சேவைகள்:

துபாயில் வீட்டு பணியாளர்களுக்கான (Domestic workers) முழு தேவைகளும், பணியாளர் நியமனம் குறித்தான சேவைகளும் ‘DUBAI NOW’ செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

விரிவாக, செயலியில் கொடுக்கப்பட்டுள்ள ‘Domestic Worker Package’ என்றதை பயன்படுத்தி வீட்டுப் பணியாளர்களின் குடியிருப்பு அனுமதிகளை வழங்குதல், புதுப்பித்தல் மற்றும் ரத்து செய்வதற்கான செயல்முறைகளை எளிதாக்கப்படுவதுடன், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் டிஜிட்டல் அடையாள நடைமுறைகளை நிறைவு செய்வதற்கான சேவைகளும் இதில் கிடைக்கும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேர சேமிப்பு:

செயலியின் சேவைகளுடன் ஒப்பிடும் போது பல நடைமுறைகளின் செயலாக்க நேரமும், ஆவண தேவையும் குறைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சேவை சேனல்களின் எண்ணிக்கை நான்கில் இருந்து ஒன்றாக குறைகிறது மேலும், செயல்பாட்டில் உள்ள நடைமுறைகளின் எண்ணிக்கையை 12 இலிருந்து நான்காக குறைகிறது, இது தேவையான அலுவலக விசிட் எண்ணிக்கையை எட்டிலிருந்து இரண்டாகக் குறைக்க வழி வகுக்கப்படுகிறது. கூடுதலாக, செயலாக்க நேரம் 30 நாட்களில் இருந்து வெறும் ஐந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது, அது மட்டுமின்றி தேவையான ஆவணங்களின் எண்ணிக்கை 10ல் இருந்து நான்காக குறைக்கப்பட்டுள்ளது. இறுதியாக பரிவர்த்தனை செலவுகளை AED 400 குறைக்க உதவுகிறது.

எப்படி வேலை செய்கிறது?

Dubai Now செயலி மூலம் வாடிக்கையாளர்கள் தங்களின் டொமஸ்டிக் பணியாளர்களுக்கு குடியிருப்பு உரிமத்தை எப்படி பெறுவது என்பதை பார்ப்போம். 

படிவத்தை நிரப்ப வேண்டும்: பணியாளரின் பெயர், பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் மருத்துவத் தகவல் போன்ற தகவல்களை நீங்கள் இதில் வழங்க வேண்டும்.

ஒப்பந்தத்தில் கையொப்பமிடுங்கள்: பணியாளரை அதிகாரப்பூர்வமாக வேலைக்கு அமர்த்துவதற்கு மின்னணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்.

மருத்துவ பரிசோதனை: தொழிலாளி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

அனுமதி பெறவும்: மருத்துவ பரிசோதனை செய்தவுடன், அரசு குடியுரிமை அனுமதி வழங்கும்.

கூட்டு முயற்சி :

இந்த சேவையானது மனித வளங்கள் மற்றும் குடியேற்ற அமைச்சகம் (MOHRE) மற்றும்  துபாயில் உள்ள குடியிருப்பு மற்றும் வெளிநாட்டினர் விவகாரங்களுக்கான பொது இயக்குநரகம் (GDRFA) ஆகிய துறைகள் Dubai Digital, ICP, டிஜிட்டல் அரசு ஒழுங்குமுறை ஆணையம் (TDRA), துபாய் சுகாதார ஆணையம் (DHA) ஆகிய துறைகளுடன் ஒருங்கிணைந்து இதனை அறிமுகம் செய்துள்ளன.