ஈத் அல் பித்ர் பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு விடுமுறை நாட்கள் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன் படி துபாய் அரசுத்துறை ஊழியர்களுக்கு மார்ச் 19, வியாழன் முதல் மார்ச் 22, ஞாயிறு வரை நான்கு நாட்கள் விடுமுறை என்றும், மார்ச் 23, திங்கட்கிழமை முதல் மீண்டும் அலுவலகப் பணிகள் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கூட்டாட்சி அரசாங்க ஊழியர்களுக்கு மார்ச் 19 முதல் மார்ச் 22 வரை மொத்தம் 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 19, வியாழன் முதல் மார்ச் 21, சனிக்கிழமை வரை 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதம் 30 நாட்களாக அமைந்தால், இந்த விடுமுறை மார்ச் 22, ஞாயிறு வரையிலும் நீட்டிக்கப்படும்.
ஈத் பண்டிகை எப்போது தொடங்கும் என்பது பிறை தெரிவதை பொறுத்து அமையும். ஐக்கிய அரபு அமீரகத்தின் பிறை பார்க்கும் குழு, மார்ச் 18 மாலை பிறையைப் பார்த்த பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும்.
