துபாய் குடியிருப்பாளர்களிடம் அமீரக அட்டைக்கு பிறகு உள்ள மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ஓட்டுநர் உரிமம். ஏனெனில் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது பரந்த அளவிலான பல்வேறு வேலைவாய்ப்புகளை மக்களுக்கு வழங்குகிறது. இந்நிலையில் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால் அதை புதுப்பிப்பதற்கு பல எளிய சேவைகளை சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் RTA வழங்கிவருகிறது. அந்த வகையில் ஓட்டுநர் உரிமம் காலாவதியாகிவிட்டால் அதை எளிதாக புதுப்பிக்க மற்றொரு எளிய சேவையை RTA அறிமுகப்படுத்தியுள்ளது. அப்படி ஒரு சேவையாக தான் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல்
துபாயில் ஓட்டுநர் உரிமங்களை RTA வலைத்தளம், RTA ஸ்மார்ட் செயலி, துபாய் நொவ்(RTA Partner App), மஹபூப் சாட்போட் போன்ற வசதிகள் மூலம் இணையம் வழியாக பொதுமக்கள் தாங்களாகவே புதுப்பிக்க முடியும். அது மட்டுமின்றி துபாய் முழுவதும் உள்ள 23 ஓட்டுநர் நிறுவனங்களிள் ஒன்றுக்கு நேரடியாக சென்று ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கலாம். இதனை தொடர்ந்து தற்போது துபாய் முழுவதும் 12 இடங்களில் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் இயந்திரங்கள்(Driving Licence Renewal Machines) அமைக்கப்பட்டுள்ளன. இந்த சுய சேவை இயந்திரங்கள் மூலம் தங்களது ஓட்டுநர் உரிமத்தை மக்கள் புதுப்பிக்க முடியும்.
ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ள 12 இடங்கள்
- Customer Happiness Center – உம்மு ரமூல்
- Customer Happiness Center – டெய்ரா
- Customer Happiness Center – அல் பர்ஷா
- Customer Happiness Center – அல் மனாரா
- Customer Happiness Center – அல் த்வார்
- Customer Happiness Center – அல் கிஃபாஃப்
- தஸ்ஜீல் அல் தவார்
- பர்ஷா தஸ்ஜீல்
- முஹைஸ்னா ஷாமில்
- தமாம் வாகன சோதனை
- அல் குசைஸ் தஸ்ஜீல்
- Wasel Vehicle Testing – அல் ஜதாஃப்
வரும் காலங்களில் பொது மக்களின் தேவைக்கு ஏற்ப கூடுதல் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் சுய சேவை இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மருத்துவ சோதனைகள்
ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க முதலில் RTA அங்கீகரித்த ஏதேனும் ஒரு மருத்துவ மையத்திற்கு சென்று கண் பரிசோதனை செய்ய வேண்டும் அல்லது உங்களிடம் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் கண் பரிசோதனை செய்ததற்கான தகுதி சான்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் தொழில்முறை ஓட்டுநராக இருந்தால் RTA அங்கீகரித்த ஏதேனும் ஒரு மருத்துவ மையத்திற்கு சென்று முழு உடல் சோதனை செய்து, தகுதி சான்றிதழ் பெறுவது கட்டாயம்.
தேவைப்படும் ஆவணங்கள்
- கண் பரிசோதனை சான்றிதழ்
- உடல் தகுதி சான்றிதழ்(தொழில்முறை ஓட்டுநர்களுக்கு)
- அமீரக அட்டை
ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் இயந்திரங்களை பயன்படுத்தும் செயல்முறை
- தொடுதிரையில் உங்களுக்கு விருப்பமான மொழியைத் தேர்ந்தெடுக்கவும்.
- மெனுவில் நீங்கள் ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் சேவையை தேர்ந்தெடுக்கவும்.
- தொடர்ந்து உங்கள் அமீரக அட்டை எண் மற்றும் ஓட்டுநர் உரிமத்தின் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்த ஆவணங்களுடன் இணைக்கப்பட்ட தொலைபேசிக்கு OTP வரும்.
- அதன் பின், உங்கள் கண் பரிசோதனை தகுதி சான்றிதழ் மற்றும் உடல் தகுதி சான்றிதழ் செல்லுபடியாவதாக இருந்தால் தானாகவே திரையில் காண்பிக்கப்படும்.
- அடுத்ததாக ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கான கட்டணத்தை செலுத்த வேண்டும். ஒருவேளை உங்கள் ஓட்டுநர் உரிமத்தில் அபராதம் நிலுவையில் இருந்தால் அதையும் சேர்த்து கட்டினால் மட்டுமே ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க இயலும்.
- இந்த செயல்முறைகள் அனைத்தும் சரியாக முடியும் பட்சத்தில் புதுப்பிக்கப்பட்ட டிஜிட்டல் ஓட்டுநர் உரிமத்தை உங்கள் மொபைலில் பெறுவீர்கள்.
நகல் மற்றும் அசல் ஓட்டுநர் உரிமம்
- உங்களுக்கு வேண்டுமென்றால் அந்த இயந்திரத்திலேயே புதுப்பிக்கப்பட்ட ஓட்டுநர் உரிமத்தின் நகலை அச்சிட்டு பெறலாம்.
- அசல் ஓட்டுநர் உரிமத்தை பெற அதற்கான கட்டணத்தை செலுத்தினால் உங்கள் விருப்பத்திற்கேற்ப வீடு அல்லது அலுவலகத்தில் டெலிவரி செய்யப்படும்.
சேவை கட்டணங்கள் விவரம்
21 வயது உட்பட்டவர்களுக்கு:
- ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க – AED 100
- அறிவு மற்றும் புதுமை கட்டணம் – AED 20
- கண் பரிசோதனை(மையம்) – AED 140 முதல் AED 180
- கண் பரிசோதனை(Mobile Truck) – AED 500
22 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு:
- ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்க – AED 300
- அறிவு மற்றும் புதுமை கட்டணம் – AED 20
- கண் பரிசோதனை(மையம்) – AED 140 முதல் AED 180
- கண் பரிசோதனை(Mobile Truck) – AED 500
10 ஆண்டுகளுக்கு மேலாக புதுப்பிக்காமல் இருப்பவர்களுக்கு:
- பயிற்சி கோப்பு திறப்பு கட்டணம் – AED 200
- கற்றல் விண்ணப்பக் கட்டணம் – AED 100
- கையேடு கையேடு கட்டணம் – AED 50
- RTA சோதனை கட்டணம் – AED 200
- ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கு தாமதக் கட்டணம் – AED 500
- ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் கட்டணம் – AED 300
- கண் பரிசோதனை கட்டணம்(மையம்) – AED 140 முதல் AED 180
- அறிவு மற்றும் புதுமை கட்டணம் – AED 20
ஓட்டுநர் உரிமம் காலாவதியான தேதியில் இருந்து ஒவ்வொரு மாதமும் AED 10 அபராதம் செலுத்த வேண்டும்.
இழந்த/சேதமடைந்த ஓட்டுநர் உரிமத்தை மாற்றுவதற்கு
- 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு : AED 100 + அறிவு மற்றும் புதுமை கட்டணம் AED 20
- 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு : AED 300 + அறிவு மற்றும் புதுமை கட்டணம் AED 20
