துபாயில் சுற்றுலா போக்குவரத்தை நெறிமுறைப்படுத்த RTA, பொருளாதாரத் துறை மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து புதிய நிர்வாக ஒழுங்கு முறையை அறிமுகம் செய்துள்ளது.
சுற்றுலா போக்குவரத்தை மேம்படுத்தும் முயற்சி:
உலகளாவிய சுற்றுலா மையமாக தனது நிலையை மேலும் வலுப்படுத்த துபாய் மற்றொரு முயற்சியை எடுத்துள்ளது. சுற்றுலா பயணத்தை மேம்படுத்தவும், சேவை தரத்தை உயர்த்தவும் புதிய சுற்றுலா போக்குவரத்து ஒழுங்கு முறையை உருவாக்க சாலைகள் & போக்குவரத்து ஆணையம் (RTA) மற்றும் பொருளாதாரம் & சுற்றுலாத் துறை இணைந்து செயல்படுகின்றன.
புதிய சுற்றுலா போக்குவரத்து ஒழுங்கு முறையின் முக்கிய அம்சங்களில் ஒன்று, சுற்றுலாப் போக்குவரத்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குதல் மற்றும் அனுமதியை புதுப்பித்தல். மேலும் சுற்றுலா வாகனங்களை பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தலும் இதில் அடங்கும்.
ஒழுங்குமுறையின் நோக்கம்:
மேலும் ஓட்டுநர்களுக்கு தொழில்முறை உரிமங்களை வழங்குதல், ஒருங்கிணைந்த சுற்றுலாப் போக்குவரத்து அமைப்பை உருவாக்குதல், சேவை தரத்தை மேம்படுத்துதல் ஆகியவை இந்த ஒழுங்குமுறையின் நோக்கமாக உள்ளது.
2023ஆம் ஆண்டின் நிர்வாகக் குழுவின் தீர்மானம் எண்.107 இன் படி, 2025ஆம் ஆண்டின் நிர்வாக முடிவு எண் 97-இன் கீழ் இயற்றப்பட்ட இந்த ஒழுங்குமுறை, சுற்றுலாத் துறைக்கான விரிவான விதிகளை வகுக்கிறது. துபாயின் பரந்த பொருளாதார மற்றும் மூலோபாய நோக்கங்களை ஆதரித்து, சுற்றுலாப் போக்குவரத்துத் துறைக்கு பயனுள்ள தீர்வுகளை வழங்கும் சேவைகளை அதன் நிறுவனங்கள் தொடர்ந்து உருவாக்கி வருவதாக RTA தெரிவித்துள்ளது.
