Centrepoint மற்றும் GGICO நிலையங்களுக்கு, மூன்று நாட்களுக்கு நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை நேரம்:

பண்டிகை காலத்தில்,  துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு சுமூகமான பயணத்தை உறுதி செய்யும் பொருட்டு, சேவை நேரத்தை நீட்டித்து இயக்க துபாய் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் முடிவு செய்துள்ளது. டிசம்பர் 28 முதல் டிசம்பர் 30 வரை துபாய் Centrepoint மற்றும் GGICO மெட்ரோ நிலையங்களுக்கு இடையே அதிகாலை 02  ரயில்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • டிசம்பர் 28: காலை 05 மணிக்கு துவங்கும் சேவை அடுத்த நாள் அதிகாலை 02 மணி வரை நீட்டிகப்படுகிறது
  • டிசம்பர் 29: காலை 08 மணிக்கு துவங்கும் சேவை அடுத்த நாள் அதிகாலை 02 மணி வரை நீட்டிகப்படுகிறது
  • டிசம்பர் 30: காலை 05 மணிக்கு துவங்கும் சேவை அடுத்த நாள் அதிகாலை 02 மணி வரை நீட்டிகப்படுகிறது

ஏற்கனவே, புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது ஏற்படும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க துபாய் மெட்ரோ டிசம்பர் 31, காலை  05 மணிக்கு துவங்கும் சேவை ஜனவரி 01 நண்பகல் 11:59 வரை இயங்கும் என்று அறிவித்திருந்து எனபது குறிப்பிடத்தக்கது.