துபாய் மெட்ரோ, நகரின் முக்கியமான பொது போக்குவரத்து அமைப்பாக செயல்பட்டு, தினசரி லட்சக்கணக்கான பயணிகளுக்கு வசதியான, பாதுகாப்பான மற்றும் அதிவேக சேவையை வழங்குகிறது. மெட்ரோவின் செயல்திறனை உறுதி செய்யும் வகையில், பயணிகள் சில கட்டுப்பாடுகளையும் விதிகளையும் பின்பற்ற வேண்டும். விதிகளை மீறினால், அதிகபட்சமாக AED 2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
| விதிமீறல்கள் | அபராதம் |
| கட்டணம் செலுத்தாமல் பயண மண்டலத்தில் நுழைதல் அல்லது வெளியேறுதல் | AED 200 |
| கேட்கப்படும் பொழுது நோல் (Nol) கார்டை வழங்க தவறுதல். | AED 200 |
| மற்றவர்களுக்கான நோல் கார்டை பயன்படுத்துதல். | AED 200 |
| காலாவதியான நோல் கார்டை பயன்படுத்துதல். | AED 200 |
| செல்லுபடியாகாத நோல் கார்டை பயன்படுத்துதல். | AED 200 |
| அதிகாரிகளின் அனுமதியின்றி நோல் கார்டுகளை விற்பனை செய்தல். | AED 200 |
| போலி நோல் கார்டை பயன்படுத்துதல். | AED 500 |
| பிற பயணிகளுக்கு தொந்தரவு அல்லது சிரமம் ஏற்படுத்துதல். | AED 100 |
| குறிப்பிட்ட பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை ஆக்கிரமித்தல். | AED 100 |
| தடை செய்யப்பட்ட இடங்களில் உணவு உண்பது, பானங்கள் குடிப்பது. | AED 100 |
| தடை செய்யப்பட்ட இடங்களில் உறங்குவது. | AED 300 |
| பொது போக்குவரத்து வசதிகளில் உள்ள உபகரணங்கள் அல்லது இருக்கைகளை சேதப்படுத்துதல். | AED 2,000 |
| மெட்ரோ பயணிகளுக்காக ஒதுக்கப்பட்ட பகுதிகளில் அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவை தாண்டி வாகனங்களை நிறுத்துதல் | நாளொன்றுக்கு AED 200(அதிகபட்சமாக AED 1,000) |
| பொது போக்குவரத்து நிர்வாகம் தடைசெய்த இடங்களில் அனுமதியின்றி நுழைதல் | AED 100 |
| பயணிகளுக்காக ஒதுக்கப்படாத இடங்களில் நிற்றல், அமர்தல் | AED 100 |
| இருக்கைகளில் கால்களை வைத்தல் | AED 100 |
| பொதுப் போக்குவரத்து வசதிகளில் பொருட்களை விற்பது அல்லது விளம்பரப்படுத்துவது | AED 200 |
| அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற தவறுதல், அவர்களின் பணியை செய்ய விடாமல் தடுத்தல். | AED 200 |
| அறிவிப்பு பலகைகளில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை மீறி பொது போக்குவரத்து வசதிகளை பயன்படுத்துதல். | AED 200 |
| பார்வையற்றோருக்கான வழிகாட்டி நாய்களை தவிர, பிற விலங்குகளை அழைத்து வருதல். | AED 100 |
| துப்புதல், குப்பை போடுதல், அல்லது சுகாதார சீர்கேடு ஏற்படுத்துதல். | AED 200 |
| பொதுப் போக்குவரத்து சேவைகளில் புகைபிடித்தல் | AED 200 |
| நகரும் படிக்கட்டு (Escalator), மின் தூக்கி (Lift) போன்றவற்றை முறையற்ற முறையில் பயன்படுத்துதல். | AED 100 |
| மெட்ரோ இயக்கத்தில் இருக்கும் போது ஏறுதல், இறங்குதல், கதவை திறக்க முற்படுதல். | AED 100 |
| பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் அல்லது பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கும் பொருட்கள் எடுத்துச் செல்லுதல். | AED 100 |
| ஓட்டுநரின் கவனத்தை சிதறடித்தல், பணியை செய்ய விடாமல் தடுத்தல். | AED 200 |
| பொதுப் போக்குவரத்தில் மதுபானங்களை எடுத்துச் செல்லுதல். | AED 500 |
| ஆயுதங்கள், கூர்மையான கருவிகள், எரிவாயு போன்ற ஆபத்தான பொருட்களை எடுத்துச் செல்லுதல். | AED 1,000 |
| பாதுகாப்பு சாதனங்கள், அவசர வெளியேற்றங்கள், பொத்தான்களை அவசியமின்றி பயன்படுத்துதல். | AED 2,000 |
பொதுப் போக்குவரத்து மீறல்களுக்கு விதிக்கப்பட்ட RTA அபராதங்களை செலுத்தும் முறைகள்:
1. அதிகாரியிடம் நேரடியாக கட்டலாம் (On the Spot Payment):
அபராதம் விதிக்கப்பட்ட உடனேயே, அபராதம் விதித்த RTA அதிகாரியிடம் நேரடியாக, அபராதத்தை செலுத்தலாம். அபராதம் செலுத்தியதும், அதிகாரப்பூர்வ ரசீது பெற வேண்டும்.
2. சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் இணையதளம் (RTA Website):
RTA இணையதளத்தில் உள்ள அபராதம் செலுத்தும் பிரத்யேக போர்டல் மூலம், ஆன்லைனில் அபராதங்களை செலுத்தலாம். RTA இணையதள முகவரி: www.rta.ae
3. RTA வாடிக்கையாளர் சேவை மையங்கள் (RTA Customer Happiness Centres):
சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணைத்தின் நகரம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர் சேவை மையங்கள் மூலம் அபராதங்களை செலுத்தலாம்.
அபராத எண்ணை (Fine Number) வழங்கி, பணம் அல்லது கார்டு மூலம் கட்டணம் செலுத்தலாம்.
4. சுய சேவை இயந்திரங்கள் (Self-Service Machines):
பயணிகள் RTA-வின் சுய சேவை இயந்திரங்கள் மூலம் அபராதங்களை செலுத்தலாம்.
மெட்ரோ ஆய்வாளரால் விதிக்கப்பட்ட அபராதத்தைக் குறித்து முறையீடு செய்ய விரும்பினால் கீழ்கண்ட படிநிலைகளை பின்பற்றவும்.
தேவையான ஆவணங்கள்:
- அபராத எண் – அபராத அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள எண்.
- அபராதம் செலுத்திய ரசீது – ஆய்வாளர் அல்லது சேவை மையங்களில் அபராதம் செலுத்தப்பட்டு இருந்தால் அதன் ரசீது.
- அபராத அறிவிப்பு நகல்
- நோல் கார்டு (Nol Card) நகல் அல்லது நோல் கார்டின் பின்புறத்தில் உள்ள எண்ணை வழங்குதல்.
விசிட் விசா பயணிகளுக்கு:
- விசிட் விசா நகல்,
- பதிவு முத்திரை (Entry Stamp),
- பாஸ்போர்ட் நகல்,
- மேல்முறையீடு விண்ணப்பத்துக்கு ஆதரவளிக்கக்கூடிய பிற ஆவணங்கள்.
முறையீடு செய்யும் முறை:
ask@rta.ae என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
Subject Title: ‘Fine Appeal’ மற்றும் அபராத எண் குறிப்பிட வேண்டும்.
அனைத்து ஆதார ஆவணங்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
RTA உங்கள் மேல்முறையீட்டை மதிப்பாய்வு செய்து மின்னஞ்சல் மூலம் பதிலளிக்கும்.
முக்கிய குறிப்புகள்:
ஆவணங்கள் தெளிவாகவும் படிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யவும். தெளிவற்ற அல்லது முழுமையற்ற தகவல்கள் நிராகரிக்கப்படலாம். எதிர்காலத்திற்கான குறிப்புக்காக, உங்கள் மின்னஞ்சல் மற்றும் ஆவணங்களின் நகலை வைத்திருங்கள்.
