துபாய் மிராக்கிள் கார்டன் சீசன் 14; இம்மாதம் தொடங்குகிறது

உலகின் மிகப்பெரிய மலர் கண்காட்சிகளில் ஒன்றான துபாய் மிராக்கிள் கார்டனின் 14வது சீசன் வருகிற செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. 

துபாய் மிராக்கிள் கார்டன் 

மிராக்கிள் கார்டன் வரவிருக்கும் சீசனுக்கான திறப்பு தேதியை உறுதிப்படுத்தியுள்ளது. உலகின் மிகப்பெரிய மலர் கண்காட்சிகளில் ஒன்றான இந்த மிராக்கிள் கார்டன் வரும் செப்டம்பர் 29ஆம் தேதி திறக்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிறப்பம்சங்கள் 

துபாயின் அல் பார்ஷா சவுத் 3 பகுதியில் அமைந்துள்ள மிராக்கிள் கார்டனில் மொத்தம் 72,000 சதுர மீட்டர் பரப்பளவில் 150 மில்லியனுக்கும் அதிகமான பூக்கள் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இவை பார்வையாளர்களின் கண்களைக் கவரும் வகையில் பல வடிவமைப்புகளில் அலங்கரிக்கப்படும். 

இந்த ஆண்டு மிராக்கிள் கார்டனில் கலை, இயற்கை மற்றும் தொழில்நுட்பத்தை இணைத்து வெளிச்சத்திற்கு ஏற்ப மாறும் மின்விளக்கு காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பூக்களால் உருவாக்கப்பட்ட A380 விமானம் இந்த சீசனின் சிறப்பம்சமாக இருக்கும் என கூறப்படுகிறது. 

உருவாக்கியுள்ளது. இதுவரை ஒருபோதும் காணாத புதிய பூந்தோட்ட அமைப்புகளை காண்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், மக்கள் விரும்பும் பெரிய எமிரேட்ஸ் A380 பூத் விமானம், பிரபலமான இதய வடிவ வளைவுகள், மற்றும் கூரைகளால் ஆன பாதைகள் போன்றவை இடம் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சீசனிலும் மிராக்கிள் கார்டன் நண்பர்கள், குடும்பங்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் ஒன்றிணைந்து தங்களது அழகான தருணங்களைப் பகிரும் இடமாக மாறி வருகிறது. தற்போது 14வது சீசனும் அதை நோக்கி காத்திருப்பதாகவும், இந்த சீசன் அனைவரையும் கவரும் என மிராக்கிள் கார்டன் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முகமது ஜாஹர் ஹம்மாதி கூறினார். 

டிக்கெட் மற்றும் நேரம்

வார நாட்களில் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரையிலும், வார இறுதி நாட்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை துபாய் மிராக்கிள் கார்டன் திறந்திருக்கும். டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் வாங்கலாம். அமீரக குடியிருப்பாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.