தொழிலாளர் பாதுகாப்புக்கு புதிய முயற்சி: ‘On-the-Go’ திட்டத்தின் அம்சம்!

‘On-the-Go’ திட்டம் என்பது துபாய்  காவல்துறையின் ஒரு முன்னேற்றமான சேவை முயற்சி ஆகும். இது பொதுமக்களுக்கு காவல்துறையின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம், மக்கள் காவல் நிலையங்களுக்கு நேரில் செல்ல வேண்டிய தேவையை குறைத்து, அவர்களின் நேரத்தையும், செலவையும் மிச்சப்படுத்துவதாகும். இதில் ஏற்கனவே ஆறு சேவைகள் இருந்த நிலையில், தற்போது தொழிலாளர் புகார் பதிவு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சேவை ஆகிய  இரண்டு சேவைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, Emarat, ENOC, மற்றும் ADNOC உட்பட முக்கிய எண்ணெய் நிறுவனங்களுடன் இணைந்து நடைபெற்ற கூட்டத்தில் வெளியிடப்பட்டது. 

‘On-the-Go’ திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

  • வாகன ஓட்டிகள் சிறிய விபத்துகளை நேரடியாக பெட்ரோல் நிலையங்களில் புகாரளிக்கலாம்.
  • அடையாளம் தெரியாத நபர்களால் ஏற்பட்ட விபத்துகளுக்கான புகார்கள் பதிவு செய்யலாம்.
  • இழந்த அல்லது கண்டெடுத்த பொருட்களை பதிவு செய்யும் வசதி.
  • வாகன பழுதுகளை சரிசெய்ய தேவையான வழிகாட்டுதல்.
  • பொதுமக்கள் சமூக பிரச்சனைகள் மற்றும் குற்றங்களை புகாரளிக்கலாம்.
  • இணையதள குற்றங்களை பதிவு செய்யும் வசதி.
  • ஊதியம், தங்குமிடம் அல்லது பணியிட பாதுகாப்பு தொடர்பான புகார்கள் பதிவு செய்யலாம்.
  • உடல், கேட்கும், பார்வை குறைபாடுகள் உள்ள மாற்றுத்திறனாளி நபர்களுக்கான முன்னுரிமை சேவைகள்.

சேவை வழங்கும் முறை:

  • வாகன ஓட்டிகள் ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றிதழ் மற்றும் காப்பீட்டு சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்கள் வேண்டும்.
  • சேவை நிலைய பணியாளர்கள் வாகன சேதங்களின் புகைப்படங்களை எடுத்து, தேவையான விபத்து அறிக்கையை உருவாக்குவார்கள்.
  • குறைந்த நேரத்தில், பொதுவாக 2 நிமிடங்களில், தேவையான அறிக்கைகள் வழங்கப்படுகின்றன. 

சேவையின் நன்மைகள்:

  • சேவை நேரம் 24 மணி நேரத்திலிருந்து 2 நிமிடங்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது.
  • காவல்துறையால் பயிற்சி பெற்ற பணியாளர்கள் மூலம் சேவைகள் விரைவாக வழங்கப்படுகின்றன.
  • 130-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்களில் இந்த சேவைகள் கிடைப்பதால், சேவைகளை எளிதில் அணுக முடியும்.
  • AED 1,927 இல் இருந்து  AED 420 வரை செலவு குறையும். மொத்தத்தில், ‘On-the-Go’ திட்டம் துபாய் காவல்துறையின்  ஒரு முன்னேற்றமான முயற்சி ஆகும், இது பொதுமக்களுக்கு காவல்துறையின் சேவைகளை எளிதாகவும், விரைவாகவும் வழங்குவதில் முக்கிய பங்காற்றுகிறது.