துபாய் மன்னர் மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் துபாய் ஊரகப் பகுதியான சைஹ் அல் சலாம் இயற்கை எழில் சூழ்ந்த பாதையை (Saih Al Salam Scenic Route) சுற்றியுள்ள சுற்றுலாப் பகுதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பகுதிக்கு உட்பட்ட ஐந்து முக்கிய இடங்களை தனியார் துறைகளுடன் இணைந்து மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
துபாய் ஊரக பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்கள் 2024 மற்றும் 2028-க்கு இடைப்பட்ட காலத்தில் மேம்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் சுமார் 37 பகுதிகளை மேம்படுத்த, AED 390 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
துபாய் மன்னர் கூறியது என்ன?
இது குறித்து துபாய் மன்னர் மாண்புமிகு ஷேக் முகமது, சைஹ் அல் சலாம் பகுதியை மேம்படுத்தும் திட்டம், அமீரக தந்தை மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்களின் எதிர்கால பார்வையையும், கனவையும் பிரதிபலிக்கும் விதமாக கொண்டுவரப்பட்டுள்ளது எனவும் துபாய் ஊரக பகுதிகளை மிகவும் அழகான, அனைவரும் கொண்டாடடும் ஓர் இடமாக மாற்றவும் திட்டமிட்டுள்ளோம் என்றார். வாழ்வதற்கும் வேலை செய்வதற்கும் சிறந்த இடமாக அமீரகத்தின் நிலையை உறுதிப்படுத்துவதற்கும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் பார்வையாளர்களுக்கு விருப்பமான ஓர் இலக்காக இது மாற்றியமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
2040-க்குள் துபாய் ஊரக பகுதியை இயற்க்கைக்கு உகந்த இடமாக மாற்றி பொதுமக்களுக்கு வழங்கும், லட்சிய பார்வையை நோக்கமாக கொண்டது. இதன் மூலம் நகர வாழ்வை விடுத்து இயற்கையோடு இணைந்து வாழும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. நாங்கள் தொடர்ந்து இது போன்ற திட்டங்களை துபாய் முழுக்க அமல்படுத்துவோம் என்று அவர் தெரிவித்தார்.
என்னென்ன மேம்பாடுகள்?
- இதில் 97.86 கிலோ மீட்டர்களுக்கு சைக்கிள் ட்ராக்குகளும், ஏற்கனவே உள்ள ட்ராக்குடன் சேர்த்து மொத்தம் 156.61 கிலோ மீட்டர்களுக்கு சைக்கிள் ட்ராக் அமைக்கப்படுகிறது.
- அல் குத்ரா ஏரிகள் பகுதியில் உள்ள பெரிய மையத்திற்கு அருகாமையில் ஓர் வெளிப்புற திரையரங்கு அமையப்படவுள்ளது.
- இயற்கை எழில் பொங்கும் காட்சிகளை காண சிறப்பு இடம் ஒன்றும், ஹாட் ஏர் பலூன் காட்சிகளையும் காண வழிவகை செய்யப்படுகிறது.
- இந்த சுற்றுலாத் திட்டம் மூலம் துபாய் கிராமப் புறங்கள் மேம்படுவதுடன், கிராமங்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி போன்ற அத்தியாவசிய தேவைகளும் பூர்த்தி என அறிவிக்கப்பட்டுள்ளது.
