துபாய் காவல்துறைக்கு ISO சான்றிதழ்

துபாய் காவல்துறைக்கு ISO சான்றிதழ்

துபாய் காவல்துறை ஒரு புதிய மைல்கல்லை அடைந்துள்ளது. பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரமளிப்புக்காக ISO 53800:2024 என்ற சான்றிதழை துபாய் காவல்துறை பெற்றுள்ளது. இந்த அங்கீகாரத்தை புரோ விரிடாஸ் (Bureau Veritas) நிறுவனம் வழங்கி துபாய் காவல்துறையின் உறுதியான உழைப்பை எடுத்துகாட்டியுள்ளது.

இந்த முயற்சியை துபாய் காவல்துறை மகளிர் கவுன்சில் வழிநடத்தியுள்ளது. கொள்கைகள் மற்றும் முடிவெடுப்பதில் பாலின சமத்துவம், சம ஊதியத்தை ஊக்குவித்தல், அனைவரிடத்திலும் பாலின சமநிலையை வளர்ப்பது மற்றும் பாகுபாடு காட்டாதது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பயிற்சி வழங்குதல் ஆகியவை இதற்கு முக்கிய காரணமாக விளங்கியுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட தரநிலைகளில் வேலை-வாழ்க்கை சமநிலையும் வலுவாக இடம்பெற்றது.

 சம வாய்ப்பு கலாச்சாரம்

மேஜர் ஜெனரல் ஷேக் முகம்மது அப்துல்லா அல் முஅல்லா, இதைப் பற்றி கூறியதாவது:

 இந்த சான்றிதழ் வெறும் அங்கீகாரம் அல்ல; இது நியாயம் மற்றும் சம வாய்ப்பை முதன்மைப்படுத்தும். 

 பாலினம் என்ற காரணமின்றி ஒவ்வொருவரும் ஊக்கமளிக்கப்படும் மற்றும் ஆதரிக்கப்படும் பணியிடத்தை உணர வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். 

 இது அனைவருக்கும் சொந்தமான வெற்றி

துபாய் காவல்துறை மகளிர் கவுன்சிலின் தலைவி லெப்டினன்ட் கர்னல் அனூத் அல் சதி இந்த சான்றிதழை பெற்றதை பற்றி கூறுகையில்,

 இந்த வெற்றி ஒவ்வொரு பிரிவினரும் ஒன்றாக செயல்பட்டதன் பலனாகும். இது துபாய் காவல்துறையின் நோக்கத்தைக் காட்டுகிறது. பெண்கள் தலைமை மற்றும் செயல்பாட்டு நிலைகளில் முன்னிலை வகிக்க, தங்கள் திறமைகளை வெளிக்கொணர வேண்டும் என்பதைக் காட்டுகிறது.”

 வேலை-வாழ்க்கை சமநிலை, மகிழ்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவை எங்கள் பணியிடத்தில் அனைவருக்கும் உறுதி செய்யப்படுகின்றன, என்றார்.

TAGGED: